உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 57 வழியோடு போனபோது இந்தக் கிளி பறந்துவந்ததைக் கண்டு ஓடிவந்து பிடித்துக் கொணர்ந்தேன்' என்றார். 5-வது அதிகாரம் திங்கட்கிழமை - முதல்வலை அந்த யெளவன புருஷர் தாம் கலியாணபுரத்து மிட்டாதாரர் என்று சொன்னதைக் கேட்டவுடனே, பூர்ண சந்திரோதயத்தின் முகம் சட்டென்று மாறியது. அவர் யாரோசாதாரண மனிதரென்று அதுகாறும் நினைத்து அசட்டை யாக மதித்திருந்தவள், அவரது மேம்பாட்டை யுணர்ந்து அவரிடத்தில் மரியாதை காட்டுகிறவள்போல திடுக்கிட்டுத் தனது சிரத்தைக் கீழே கவிழ்த்துக்கொண்டாள். நாணத்தினாலும், வெட்கத்தினாலும் அவளது நுட்பமானசரீரம் மந்தமாருதத்தில் அசையும் மாந்தளிர்போல நடுங்கியது. இருந்தாலும், அவள் தனது மனவெழுச்சிகளையும் உணர்வுகளையும் வெளியில் காட்டாமல் மறைத்துக்கொண்டவளாய்த் தனது அரிய கிள்ளை திரும்பவும் தன்னிடத்தில் வந்து சேர்ந்தது பற்றி மட்டுக்கடங்கா மகிழ்ச்சியும், தனக்கு நல்ல தருணத்தில் உதவி செய்த அந்தப்பெரிய மனிதரிடத்தில் மிகுந்த நன்றி விசுவாசமும் தோற்றுவித்தவளாய், அடக்கமாக அவரைப் பார்த்துப் புன்னகை யோடு பேசத் தொடங்கி, 'இந்த துஷ் டக் கிளி செய்த காரியத்தினால், நான் எவ்வளவு தூரத்திற்கு அபராதி ஆகிவிட்டேன்! மகாப் பிரபுவாகிய தங்களுக்கு நான் இப்படிப்பட்ட இழிவான வேலையும் சிரமமும் கொடுத்து விட்டதைப் பற்றி எனக்கு நிரம்பவும் விசனமுண்டாகிறது. தாங்கள் தயைபுரிந்து மன்னித்துக் கொள்ள வேண்டும்" என்று தேன்போல மாதுரியமாகப் பேசினாள். அவளது கனிமொழியைக் கேட்ட கலியாணபுரம் ஜெமீந்தார் 'அடடா இது ஒரு பெரிய சிரமமா! அப்படி ஒன்றுமில்லை. இது