பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 63 வெறுக்க வேண்டும். ஆகா! நான் மனிதனாகப் பிறந்து இப்படி அவஸ்தைப் படுவதைவிட, அந்தக் கிளியாகப் பிறந்திருந்தால், உன்னுடைய பிரேமைக்கும் வாஞ்சைக்கும் நான் பாத்திரனாயிருப்பேன் அல்லவா!' என்று வாழைப் பழத்தில் ஊசியைச்சொருகுவது போல மிருதுவாகப் பேசினார். அவரது சொல்லைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் ஒருவித மகிழ்ச்சியடைந்து கலகலவென்று நகைத்துவிட்டு அந்தப் பஞ்சவர்ணக்கிளியை மிகவும் பிரியமாக நோக்கி, “ரங்க ரங்கா! கஸ்தூரி ரங்கா காவேரி ரங்கா! எங்கே? சொல் பார்ப்போம். உன்ைைனவிட்டு விடுவேன் என்று பார்த்தாயா? இப்பேர்ப் பட்ட பெரிய பிரபுக்களெல்லாம் உன்னை வெறுக்கும்படியான காரியத்தை ஏன் செய்தாய்? இனிமேல் செய்யமாட்டே னென்று கன்னத்தில் போட்டுக்கொள். எங்கே? அக்கா அக்கா அக்கா! சொல் பார்ப்போம் ' என்று கூறி அதனோடு கொஞ்சத் தொடங்கினாள். அவள் அவ்வாறு நடித்ததைக் கண்ட கலியாணபுரம் மிட்டாதாரது முகம் வாட்டமடைந்தது. மனம் தவித்தது. அவளது வார்த்தைகளின்மேல் தாம் மிகவும் தந்திரமாகப் பேச்சைக்கொடுத்து அவளது மனத்தின் ஆழத்தைப் பார்க்க வேண்டுமென்று, அவர் செய்த முயற்சிக்கு அந்த அணங்கு இடங் கொடுத்துப் பேசாமல் அவரது கபடக் கருத்தை அறிந்து கொண்டவள்போலக் காட்டிக்கொள்ளாமல், அவரது சொற்களை விளையாட்டாக மதித்து அவ்வாறு கிளியினிடத்தில் பேசியது அவரது மனதை அறுத்தது. ஒரு வித அவமானமும், விசனமும் அடைந்தவராய், அந்த யெளவன புருஷர் கலங்கி நிற்க, அவள் அவர் சொன்ன வார்த்தையை மறுபடியும் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சிகொண்டு நகைப்பவள்போல நடித்து, 'பேஷ் தாங்கள் சொன்ன வார்த்தை மிகவும் புதுமையாக இருக்கிறது!’ என்று கூறி நகைத்தவளாய், அதுகாறும் நின்றதனால், அலுத்துப் போனவள் போல