உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பூர்ணசந்திரோதயம்-1 மாத்திரம் அடைய வேண்டுமானால், அது நிறைவேறுமா? ஆகையால், தாங்கள் கிளியாக மாறுவது எப்படி சாத்திய மில்லாத காரியமோ, அதுபோல தாங்கள் கிளியாக மாறியபின் மனிதருடைய பகுத்தறிவைக் கொள்வதும் சாத்தியமில்லாத விஷயம்" என்று வேடிக்கையாகப் பேசினாள். அதைக்கேட்ட கலியாணபுரம் மிட்டாதார் அவளை நோக்கி, நகைத்து வேடிக்கையாகப் பேசத் தொடங்கி, 'அடடா! அப்படியா நினைக்கிறாய் உன்னுடைய இனிமையான வடிவத்தை மனதிற்குள் பதிய வைத்துக்கொண்டு ஒரு மனிதன் முயற்சி செய்ய ஆரம்பிப்பானாகில், அவனுக்குச் சாத்திய மில்லாத காரியமிருக்குமா? ஒருநாளுமிருக்காது. உன்னுடைய பெயரை ஒருதரம் ஜெபித்தால் எவராலும் சாத்தியமில்லாத காரியமெல்லாம் சாத்தியமாகிவிடாதா உன் பொருட்டு மனிதன் உயிரோடு இருந்தாலும், அவன் இந்தப் பிறவியிலேயே சாயுஜ்ய பதவியை அடைந்தவன் போலாவான்; உன் பொருட்டு இறந்தாலும், அவனுக்கு உடனே சொர்க்க போகம் சித்தித்து விடும் ' என்று தமது வார்த்தைகளி லெல்லாம் மிகுந்த பிரியத்தையும் உருக்கத்தையும் புகுத்திப் பேசினார். அதைக் கேட்ட பெண்ணரசி மிகுந்த வியப்பும் திகைப்பும் தோற்றுவித்தவளாய்ச் சந்தேகத்தோடு அவரது முகத்தை உற்று நோக்கி, "மகாப்பிரபுவே தாங்கள் கடைசியாகச் சொன்ன வார்த்தை என் மனசை நிரம்பவும் வருத்துகிறது. என்னால் ஓர் ஈ, எறும் பு கூட உயிர்விட நான் சகித்திரேன். ஆகையால் எனக்காக எந்த மனிதரும் உயிரை விடவேண்டாம்' என்றாள். உடனே அந்த யெளவன புருஷர் மிகவும் இளக்கமாகவும் இறைஞ்சிய குரலாகவும் பேசத் தொடங்கி, 'அப்படியானால் இறந்து போகவேண்டாம். பிழைத்துப்போமென்று நீ எனக்கு அபயஸ்தம் கொடுக்கிறாயா?" என்று கூறிக் கண் சிமிட்டினார். அந்த வார்த்தையைக் கேட்ட பெண்மணிதனது ஸோபாவை