பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 12 1

வெளியிலுள்ள எனது நண்பர்களுக்கு,

நீங்கள் அன்புகூர்ந்து எனக்கு அனுப்பிய கடிதம் வரப்பெற்று விஷயங்களை நான் அறிந்து கொண்டேன்.

நீங்கள் என் விஷயத்தில் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டு என்னை விடுவிக்க முயற்சிப்பதிலிருந்து என்னுடைய வரலாறுகளெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டு மென்று நினைக்கிறேன். அதுவுமன்றி, நான் இந்தச் சிறைச் சாலைக்குள் அடைக்கப்பட்ட காரணமும், இவ்விடத்தில் சில தினங்களுக்குமுன் அபிராமி என்ற கூத்தாடிப் பெண் செய்த லாகலங்களும் மோசங்களும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவளும் இவ்விடத்திலுள்ள கமிஷனர் முதலிய எல்லோரும் ஒன்றுகூடி நான் அபிராமியைக் கற்பழித்துவிட்டதாகக் கட்டுப்பாடாக என்மேல் குற்றம் சுமத்துவதும் ஷண்முக வடிவைக் கொணர்ந்து காட்டியதும் கூட உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதன்பிறகு நான் கடுமையான நோயில் விழுந்து தப்பிப் பிழைத்தேன் என்பது உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, அது மாத்திரம் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. நேற்றையதினம் போலீஸ் கமிஷனர் என்னிடம் வந்து தமது முடிவைத் தெரிவித்தார். அபிராமி என்னும் கூத்தாடிப்பெண் என்பேரில் நியாயாதிபதியினிடம் பிராது கொடுத்ததாகவும், நான் அவளைக் கெடுத்து விட்டபடியால் அவளை நான் சம்சாரமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நியாயாதிபதி தீர்மானித்திருப்பதாகவும் நான் உடனே புறப்பட்டுப் போய் அந்தப் பெண்ணின் ஜாகையில் அவளோடு இருக்க வேண்டுமென்றும், அப்படிப் புறப்பட்டுப் போகுமுன் நான் ஒர் ஒப்பந்தம் எழுதிக்கொடுக்க வேண்டும் என்றும், நான் இந்த ஊரைவிட்டு வெளியில் போகக் கூடாதென்றும் யாருக்காவது கடிதம் எழுதினால் போலீசார் மூலமாக அனுப்ப வேண்டு மென்றும் இந்த இரண்டு விஷயங்களையும் ஒப்பந்தத்தில் எழுதிக் கையெழுத்துச் செய்ய வேண்டுமென்றும் போலீஸ்