பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 15 தெரிந்தவளாகவோ, அல்லது, உங்கள் புருஷரிடத்திலும் கள்ள நட்புடையவளாகவோ இருந்திருக்க வேண்டும் என்றும், அவள் உங்கள் புருஷரின் மேல் ஏதோ காரணத்தினால் பகைமையும் ஆத்திரமும் கொண்டு, பழிதீர்த்துக் கொள்வதற்காக இந்தக் கடிதத்தை எழுதி நியாயாதிபதிக்கு அனுப்பி, உங்கள் புருஷரைக் காட்டிக் கொடுத்திருக்கிறாள் என்றும், அந்த மனுவி இன்னாள் என்பது ஒரு வேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் என்றும் நாங்கள் ஒருவித முடிவு செய்து கொண்டோம். ஆகையால், இதைப்பற்றி உங்களிடம் நேரில் வந்து விசாரித்து விட்டுப் போகலாம் என்று நினைத்து வந்தேன். அந்த ஜெமீந்தாருடைய பிள்ளை உங்கள் பேரில் சந்தேகப்பட்டார். ஆனால், என் மனசில் அப்படிப்பட்ட சந்தேகம் உண்டாகவில்லை. உங்கள் புருஷருடைய கொலைக்குற்ற விசாரணை நடந்த காலத்தில், அவரைத் தப்ப வைப்பதற்காக நீங்களும் உங்கள் பெரிய தகப்பனாரும் எத்தனையோ பாடுகள் பட்டதையும் அடிக்கடி நீங்கள் சிறைச் சாலைக்கு வந்து அவரிடம் நடந்துகொண்ட மாதிரியையும், அவரை மாரியம்மன் கோவிலில் நாங்கள் சிறைப்படுத்திய காலத்தில் நீங்கள் நடந்துகொண்ட மாதிரியையும் நான் எண்ணிப் பார்த்ததில், அவரை நீங்களே காட்டிக் கொடுத்திருப்பீர்கள் என்று சந்தேகிக்க என் மனம் இடம் கொடுக்கவே இல்லை. அந்த ஜெமீந்தாருடைய புத்திரர் இந்தக் கடிதத்தைக் கண்ட முதல், இதை எழுதிய பெண் யார் என்பதை உடனே கண்டுபிடித்து அவள் மூலமாகத் தம்முடைய தகப்பனார் மறைந்துபோன வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்று நிரம் பவும் ஆவல் கொண்டு துடித்துக் கொண்டிருக்கிறார். அவரும் இதோ வெளியில் வந்து வண்டியில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார் ஆகையால், இந்த விஷயத்தில் உங்களுக்குத் தெரிந்த தகவல் ஏதாவது இருந்தால், தயை செய்து அதை எங்களுக்குத் தெரிவிப்பீர்களானால் அது எங்களுக்கு நிரம் பவும் அனுகூலமாகவும், நிகரற்ற பேருதவியாகவும் g.F.IV-2