உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 199 வேண்டுமென்று முடிவுசெய்துகொண்டு மெதுவாக மேலே ஏறி வெல் வெட்டு மாடத்திற்குள் புகுந்து அங்கு ஏராளமாக நிறைந்திருந்த ஸோபாக்களினிடையிலும், பூத்தொட்டிகளின் மறைவுகளிலும் மறைந்திருந்தான். அவ்விடத்தில் எப்போதும் காணப்பட்ட ஷண்முகவடிவை உற்றுநோக்கி, அவள் ஒருகால் லீலாவதியின் தங்கையாக இருப்பாளோ, அல்லது ஜெமீந்தாருடைய நெருங்கிய உறவினளாக இருப்பாளோ என்று பலவாறு ஐயமுற்றவனாக இருந்தான். அதற்குமுன் அதுவரை யில் தான் எங்கும் பார்த்திராத மகா விநோதமான இடமாக இருந்ததைக் கண்டு அவன் கட்டிலடங்காத அபாரமான பிரமிப்பும் ஆச்சரியமும் அடைந்து அன்றைய தினம் தனக்குப் பெருத்த வேட்டை அகப்படப் போகிறது என்றும், அதன் பிறகு அதிசீக்கிரமான ஒர் இரவில் தான் நூற்றுக்கணக்கான ஆள்களையும் ஏராளமான வண்டிகளையும் கொணர்ந்து வைத்துக்கொண்டு தீவட்டிக் கொள்ளையடித்து, அந்த மாளிகை யிலுள்ள ஐசுவரியம் முழுதையும் அபகரித்துக் கொண்டு போய் விட வேண்டுமென்று நினைத்து மனப்பால் குடித்து ஆகாயக் கோட்டை கட்டிக்கொண்டிருந்தான்.

அதன்பிறகு லீலாவதி அவ்விடத்துக்கு வந்து ஷண்முக வடிவோடு பேசிக் கொண்டிருந்த காலத்தில், அவன் அவர்களுக்கு நிரம் பவும் அருகில் மறைந்திருந்து அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தான். பிறகு சிறிது நேரத்திற்கப்பால் அவர்கள் இருவரும் கீழே இறங்கிப் போய்த் தமது போஜனத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்ததையும் அவன் கவனித்துக் கொண்டே இருந்தான். பிறகு கொஞ்ச நேரத்தில் ஒரு தாதி வந்து கூப்பிட லீலாவதி கீழேபோய்த் திரும்பி வந்து ஜெமீந்தார் மாரியம்மன் கோவிலுக்குப் போன விவரத்தையும், கமலம் பின்னால் வந்து கொண்டிருக்கிறாள் என்று ஆள் சொன்னதாகச் சொன்ன வரலாற்றையும், கட்டாரித் தேவன் நன்றாகத் தெரிந்துகொண்டே ஸோபாவின் கீழ் படுத் திருந்தான். அந்த ஜெமீந்தாருக்கு