உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 221

நின்றாள். போலீசார் சொன்ன வார்த்தைகளின் உள் கருத்து இன்னதென்பதை அவள் உடனே உணர்ந்து கொண்டாள். யாரோ ஒரு ஸ்திரீ திருட்டுத்தனமாகக் குழந்தை பெற்று அதன் கழுத்தைத் திருகிக் கொன்று, அதைத்துணியில் வைத்துக்கட்டிக் கொண்டு போய் பக்கத்து சந்தில் போட்டுவிட்டு வந்ததைக் கண்டு அவர்கள் அவ ைபாத் துரத்திக் கொண்டு ஓடி வந்தவர்களென்றும், அப்படி ஒடி வந்தவளே. தான் என்று நினைத்துத்தன்னைப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும், அவள் எளிதில் யூகித்துக் கொண்டாள். முற்றிலும் சம்சயிக்கத் தக்க நிலைமையில் தான் இருந்து பிடிபட்டிருப்பதால், தான் நிரபராதியென்று எவ்வளவுதான் சொன்னாலும் அவர்கள் அதை நம்பமாட்டார்கள் என்ற உறுதி அவளது மனதிலேயே உண்டாகி விட்டது. இருந்தாலும், தான் அதற்கு மேல் நாணுவதிலும் லஜ்ஜைப் படுவதிலும் தனக்குக் கெடுதலேயன்றி நன்மை ஏற்படாத வகையால் தான் துணிந்து அவர்களோடு பேசியே தீரவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டவளாய்த் தலை குனிந்து மிருதுவாகப் பேசத் தொடங்கினாள். அதற்குமுன் போலீசார் செய்த கூக்குரலை கேட்டு அண்டை அயல் வீடுகளிலிருந்த ஜனங்களெல்லோரும் கையில் விளக்குகளோடு கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்து போலீசார் இருந்த இடத்தில் ஏராளமாகக் கூடி, ‘என்ன நடந்தது? என்ன விசேஷம்?’ என்று கேட்கத் தொடங்கியதன்றி, நாணிக்கோணித் திண்ணையின் மூலையில் நடுநடுங்கி மாணிளம் பேடுபோல நின்ற ஷண்முகவடிவை உற்று நோக்கி அளவற்ற வியப்பும் பிரமிப்பும் அடைந்தவர்களாய், ‘இந்தப் பெண் யார்? இவள் என்ன குற்றம் செய்துவிட்டாள்?’ என்பது போன்ற பற்பல கேள்விகளைக் கேட்கலாயினர்.

உடனே போலீசார் தங்களிடமிருந்த துணி மூட்டையைக் கீழே வைத்துப் பிரித்துக் காட்ட, அப்போதே பிறந்த ஒரு சிறிய சிசுவின் பிணம் அதற்குள் இருந்ததை ஜனங்கள் கண்டு கட்டுக்