பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பூர்ணசந்திரோதயம்-4 வழியாக ஓடினாள். நான் வீதியோடு வந்தேன். அவ்விடத்தில் கூச்சல் உண்டானதைக் கண்டு பயந்து இங்கே வந்து ஒளிந்து கொண்டேன், இந்தக் குழந்தைக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. நான் ஒரு பாவத்தையும் அறியேன். என்னை நீங்களெல்லோரும் தூற்றுவது கொஞ்சமும் அடாது” என்றாள்.

அதைக்கேட்ட ஜனங்கள் ஒருவாறு திகைப்படைந்து அதற்கு மேல் அவளைத் தூற்றாமல் மெளனமாக நின்றனர். போலீசார் அவள் முற்றிலும் பொய் பேசுகிறாள் என்று நினைத்து அவள் மீது மிகுந்த கோபம் கொண்டனர். போலீசார் தலைவன் ஆத்திரமாகவும் புரளியாகவும் அவளை நோக்கி மறுமொழி கூறத் தொடங்கி, “ஒகோ அப்படியாசங்கதி! கையும் களவுமாக நாங்கள் உன்னைப் பிடித்திருக்கையிலேயே, நீ எங்களுடைய கண்ணிலெல்லாம் மண்ணைத் துவப் பார்க்கிறாயே! உன்னுடைய சாமர்த்தியமும் நெஞ்சழுத்தமும் யாருக்கு வரும் அதிருக்கட்டும். நீ இவ்வளவு தூரம் பேசுகிறாயே! உன்னுடைய வீடு எங்கே இருக்கிறது? இந்த அர்த்தராத்திரி வேளையில் வீட்டைவிட்டு நீ தனியாக இங்கே வரவேண்டிய காரணம் என்ன? சொல் பார்க்கலாம்’ என்றான்.

அதைக்கேட்ட ஷண்முகவடிவு, ‘ஐயா! எனக்கு இந்த ஊரில் வீடுமில்லை வாசலுமில்லை. நான் இருப்பது திருவாரூர். என்னுடைய அக்காள், இந்த ஊரிலுள்ள எங்கள் மனுஷ்யாள் வீட்டுக்கு வந்து ஏழெட்டு மாச காலம் ஆகிறது. அவளைப் பார்க்க வேணுமென்று நான் இந்த ஊருக்கு வந்தேன். வந்த இடத்தில் சில மோசக்காரர்கள் என்னைக்கொண்டுபோய் வைத்துக் கொண்டு துராகிருதம் செய்ய எத்தனித்தார்கள். தெய்வச் செயலாக நான் அவ்விடத்திலிருந்து தப்பித்து வீதி வழியாக ஒடி வந்து கொண்டிருந்தேன். அப்போது நீங்கள் கூச்சலிட்டதைக் கேட்டுப் பயந்து இங்கே வந்து ஒளிந்து கொண்டேன். நீங்கள் துரத்திக்கொண்டு வந்த பெண்பிள்ளை