உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 259 இல்லாவிட்டால் கொசுவின் உபத்திரவம் அதிகமாக இருக்கும்” என்றாள்.

{

ஷண்முக வடிவு, சரி; அப்படியானால் விளக்கை நிறுத்திவிடுகிறேன்’ என்று கூறியவண்ணம், தனது பாயின் பக்கத்திலிருந்த விளக்கை அனைத்துவிட்டாள். உடனே அந்த அறைமுழுதும் இருள் சூழ்ந்துகொண்டது. அதே rணத்தில் கிழவியும் பாயின்மேல் படுத்துக்கொண்டாள்.

அவ்வாறு படுத்துக்கொண்ட இருவரும் அதிகமாக சம்பாஷிக்காமல் அப்போதைக்கு அப்போது ஏதோ இரண்டொரு வார்த்தைகளே பேசினர். அப்படி சுமார் கால்நாழிகை நேரம் கழிவதற்குள் கிழவி மெளனம் சாதித்துக் குறட்டைவிடத் தொடங்கினாள். கிழவி தூங்கிவிட்டாள். ஆதலால் தான் அவளிடம் அதற்குமேல் பேச்சுக் கொடுத்து, அவளது தூக்கத்தைக் கெடுக்கக் கூடாதென்று நினைத்த நமது யெளவன மடமாது அதன்பிறகு வாய் திறந்து பேசாமல் படுத்திருந்தாள். அன்றைய இரவு முழுதும் பலவகைப்பட்ட பயங்கரமான சம்பவங்களில் சம்பந்தப்பட்டதாலும், வெகு தூரம் நடந்ததாலும் அவளது உடம்பு முற்றிலும் தளர்ந்து ஒய்ந்துபோயிருந்தது. ஆனாலும், அவளது மனம் நிம் மதி அடையாமல் அப்போதும் பெருங்கிளர்ச்சி அடைந்து தவித்துக் கொண்டிருந்தது. அவளது சஞ்சலம் அடங்காமலேயே இருந்தது. ஆகையால், தூக்கம் பிடிக்காமலிருந்தது. அவளுக்கு நேர்ந்த பற்பல சம்பவங்களும் ஒன்றன்பின் ஒன்றாக அவளது அகக் கண்ணில் மறுபடி தோன்றிக் கொண்டிருந்தன. ஆகையால், அவள் அவைகளை விலக்கமாட்டாதவளாய் அயர்ந்து படுத்தபடி விழித்துக் கொண்டே கண்களை மூடிப் படுத்தி ருந்தாள். அரை நாழிகை கழிந்தது; ஒரு நாழிகையும் கழிந்தது. அதற்குமேலும் கழிந்தது. ஷண்முகவடிவின் அங்கங்க ளெல்லாம் தளர்ந்து ஒய்ந்து தத்தம் தொழிலைச் செய்யாமல் உணர்வற்று ஒடுங்கும் சமயத்திலிருந்தன. கண்ணிமைகள்