உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 325 யாரோ ஒரு பெரிய மனிதரது வீட்டுப்பெண்ணும், யெளவன பருவம் உடையவளுமான அந்த மடந்தை அவ்வாறு தம்மிடம் தனியாக வரவேண்டிய முகாந்திரம் என்னவாக இருக்கலா மென்றும் தானும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கூடி நடத்தும் விசாரணைக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தமிருக்குமென்றும் எண்ணமிட்ட நீலமேகம்பிள்ளை கடைசியில் மிருதுவாகவும் அன்பாகவும் பேசத் தொடங்கி, ‘அம்மா! நீங்கள் யார் தெரியவில்லையே!’ என்று நயமாக வினவினார்.

லீலாவதி, “நான்மருங்காபுரி ஜெமீந்தாருடையதம்பி மகள். என்னை லீலாவதி என்று கூப்பிடுவார்கள்’ என்றாள்.

அதைக்கேட்ட நீலமேகம் பிள்ளை மிகுந்த வியப்படைந்து, ‘ஒகோ அப்படியா! நேற்று காலையில் கூட நானும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் உங்களுடைய ஜாகைக்கு வந்திருந்தோமே. நான் வெளியில் வண்டிக்குள் உட்கார்ந்திருந்தேன். இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து உங்களிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு வந்ததாகச் சொன்னாரே! நீங்கள்தானா அது. அந்தக் கடிதங்களின் விஷயமாக நான் கூட உங்கள் பேரில் கொஞ்சம் சந்தேகம் கொண்டேன். இன்ஸ்பெக்டர் வந்து நீங்கள் சொன்னதை எல்லாம் தெரிவித்தார். நீங்கள் இப்போது மறுபடியும் அது விஷயமாகப் பேசவந்திருப்பதைப் பார்த்தால், என்தகப்பனார் காணாமல் போனசம்பந்தமாக ஏதாவது தகவல் உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அப்படித்தானே?’ என்றார்.

லீலாவதி:- ஆம். அப்படித்தான். என்றாள்.

நீலமேகம்பிள்ளை:- மற்ற விவரமெல்லாம் பிறகு சொல்ல லாம். முதலில் ஒரே ஒரு கேள்விக்குப்பதில் சொல்லுங்கள். என் தகப்பனார் இப்போது உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்துபோய் விட்டாரா? என்றார்.