உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 327 தாமாக இறந்து போகக் கூடிய நிலைமையில் இல்லையே! அவருக்குப் பிறராலேதான் மரணம் சம்பவித்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். அவரை யார் கொன்றார்கள்? என்ன காரணத்தினால் எப்படிக் கொன்றார்கள்? இந்த விவரத்தையெல்லாம் நேற்றைய தினம் நீங்கள் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சொல்லவில்லையா?"என்று வினவினார். அதைக் கேட்ட லீலாவதி முன்னிலும் பன்மடங்கு அதிக பரிதாபகரமாகக் கலங்கியழுது, ‘ஐயா! மகா கொடிய பாவியாகிய நான்தான் உங்கள் தகப்பனாருக்கு யமனாக வந்து வாய்த்தேன். என்னால் தான் அவர் உயிர் துறந்தார். இந்தச் சங்கதியை நேற்றைய தினம் நான் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் எப்படி வெளியிடுகிறது? நேற்று அவர் வந்து விஷயத்தைச் சொல் லிவிட்டுப் போனபிறகு என் மனம் முற்றிலும் மாறிப்போய்விட்டது. நீங்கள் இந்த விஷயத்தில் பலவகையான சந்தேகங்கள் கொண்டு துன்பங்களுக்கு ஆளாகி அல்லல் படுவதை விலக்க வேண்டுமென்று நினைத்து உண்மையான சங்கதிகளை எல்லாம் உங்களிடம் நானே நேரில் வந்து தெரிவிக்க வேண்டுமென்று நினைத்து இப்போது வந்தேன்’ என்றாள்.

அதைக்கேட்ட நீலமேகம் பிள்ளை முன்னிலும் பன்மடங்கு அதிக ஆச்சரியமும் திகைப்பும் அடைந்து, ‘ஹா! அப்படியா: நான் முதலில் சந்தேகப்பட்டது ஒருவிதத்தில் உண்மையாகி விட்டதுபோலிருக்கிறதே! உங்களால்தான் என் தகப்பனார் இறந்து போனாரென்றால், அவரைக் கொன்றது. நீங்கள் அல்ல வென்பது நன்றாகத் தெரிகிறது. ஒருவேளை உங்களுடைய புருஷர் அவரைக் கொன்றாரா?’ என்றார்.

லீலாவதி:- என் புருஷர் ஒரு பாவத்தையும் அறியமாட்டார். அவரும் கொல்லவில்லை; நானும் கொல்லவில்லை. என்னைப் பார்த்தால், நான் அவரைக் கொல்லக் கூடியவள் என்றா தெரிகிறது! ஐயோ! நான் அவரை என் உயிருக்குயிராகவும்