பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பூர்ணசந்திரோதயம் -4 இன்னொரு ஸ்திரீ சம்பந்தமான சதியாலோசனையாக இருக்குமோ என்ற சந்தேகமும் உண்டானது. ஆகையால், அந்த உறையைக் கிழிக்க அவனது கை பின் வாங்கியது. ஆகையால், அவன் அதைப் பிரித்துப் பார்க்கலாமா பார்க்கக் கூடாதா என்பதை நிச்சயிக்க மாட்டாதவனாய் இரண்டொரு நிமிஷநேரம் சிந்தித்திருந்த பின், அவ்விடத்தை விட்டுத் தனது விசிப்பலகை இருந்த இடத்தை அடைந்து அதன்மேல் உட்கார்ந்துகொண்டு, தான்.அந்தக்கடிதத்தை என்னசெய்வது என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கலானான். அதை யார் அனுப்பி இருப்பார்கள் அல்லது, என்ன கருத்தோடு அதை அனுப்பியிருப்பார்கள் என்ற ஐயம் தீராமலேயே இருந்தமையால், அவன் எதையும் நிச்சயமாக அறிந்துகொள்ள மாட் டாமல், கடைசியில், நல்லதோ, கெட்டதோ அதைத் தான் உடைத்துப் பார்த்து அதன் விஷயத்தை அறிந்து கொள்வதே உசிதமானது என்று அவன் தீர்மானித்தான். ஏனெனில், அது என்னவாக இருக்கும் என்ற எண்ணம் எப்போதும் தன் மனதில் எழுந்தெழுந்து தன்னை வருத்தியபடி இருக்கும். ஆதலால், அப்படி அல்லல்படுவதைவிட, அதை அப்போதே அறிந்து கொள்வது உசிதமானது என்று அவன் முடிவு செய்து கொண்டவனாய், கடிதத்தின் உறையைக் கிழித்துவிட்டு அதற்குள் இருந்த காகிதத்தை வெளியில் இழுத்தான். எழுதப்பட்ட ஒருதுண்டுக்கடிதமும், எழுதப்படாத ஒருதுண்டுக் காகிதமும், ஒருசிறிய பென்சிலும் அந்த உறைக்குள் இருந்ததைக் கலியாணசுந்தரம் கண்டு ஆவலோடு அவற்றை வெளியில் எடுத்தான். அவனது கைகள் வெடவெடவென்று நடுங்கின. மனம் துடிதுடித்தது. அந்த ஒரு நிமிஷ நேரத்தில் கோடானு கோடி எண்ணங்களைக் கொண்டு தவித்தது. எழுதப்படாததுண்டுக்காகிதமும் பென்சிலும், தான்மறுமொழி எழுதுவதற்காக அனுப்பப்பட்டிருக்கின்றன என்பது அவனுக்கு உடனே தெரிந்துவிட்டது. எழுதப்பட்டிருந்த துண்டுக் காகிதத்தை அவன் எடுத்துப் படிக்கத் தொடங்கினான். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது: