உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவும் கனியும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதியோர் கல்வி-வழியும் வகையும்



பணியாற்றி நல்ல பலனை அறுவடை செய்திருக்கிறீர்கள். அதைக் காண எனக்குப் பூரிப்பு ஏற்படுகிறது. அதற்காக உங்களைப் பாராட்டுவதற்கு முன்பு என்னைப் பாராட்டிக்கொள்கிறேன். யாரும் குறை பட்டுக்கொள்ள முடியாத அளவு ஒவ்வொருவரும் நற்பணியாற்றி யுள்ளளீர்கள். அப்படி அமைந்ததைக் கண்டு என்னையே பாராட்டிக்கொள்கிறேன். உங்கள் செயல் கண்டு மகிழ்கிறேன்.

முழு வளர்ச்சி பெற்ற மனிதன் யார்?

42 நாட்கள் வேறு வேலேயின்றி உழைத்துள்ளீர்கள்; சிறப்புத்தான். அதைவிடப் பெரிய சிறப்பு ஒன்று உண்டு. மனிதன் - அதற்காக நியமிக்கப் பட்டபோது - ஒரு பணியினை ஆற்றுவது பெரி தன்று. ஆனால், பல வேலைகட் கிடையிலும் ஏதாவது ஒரு பொதுத் தொண்டு செய்தால்தான் அதற்குத் தனிச் சிறப்பு உண்டு. அதுதான் பெருஞ் சிறப்பு. நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறைகளிலே, கல்லூரிகளிலே, பள்ளிகளிலே, மேற்பார்க்கும் வேலைகளிலே வஞ்சனையற்ற நிலையில் ஈடுபட்டு, விரும்பத் தக்க முறையில் பணியாற்றினால் போதும் என்றுமட்டும் மனநிறைவு பட்டுவிடக்கூடாது. ஒவ்வொருவரும் தங்கள் சம்பளத்திற்காகமட்டும் செயலாற்றக் கூடாது. ஒவ்வொருவரும் ஏதாவது ஊதியம் அற்ற, ஆனால் தேவையான ஒரு பொதுநலத் தொண்டினையும்

— 39 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/45&oldid=493018" இலிருந்து மீள்விக்கப்பட்டது