உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவும் கனியும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதியோர் கல்வி—வழியும் வகையும்



இவற்றில்தான் `மக்கள்’ பள்ளி (Folk High School) என்று சொல்லுகிற பெரியோர் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. அவைகளை யார் ஆரம்பித்தார்கள், அரசியலார் எவ்வளவு செலவு செய்தார்கள் என்பவைகளைப் பற்றிய அறிக்கைகளைக் கொண்டு பார்த்தால், ஒன்று தோன்றும். ஏதோ ஒருசில வெறியர்-முதியோர் கல்வி பரவவேண்டும் என்று உணர்ச்சி முறுக்குக்கொண்டவர்கள்-தம்மோடு பிறந்த எவரும் படிக்காமல் இருக்கக் கூடாது என்ற உணர்ச்சி உடையவர்கள்-தாங்கள் சாவதற்கு முன்பே எல்லோரும் படித்துவிட வேண்டும் என்று எண்ணியவர்கள்-இவர்களது முயற்சியால்தான் அவைகள் உருவாயின. நாட்டு மக்கள் அவர்களுக்கு இயன்ற வகை யிலே அளித்த பொருளுதவியைக் கொண்டு, அரசியலார் கொடுத்த சிறு உதவியையும் பெற்று அந்நாடுகளி லெல்லாம் முதியோர் கல்வி பரவி வந்திருக்கிறது.

காலம் சென்ற சத்தியமூர்த்தி அவர்கள் "இந்தியா பெரிய நாடு, 30 கோடி மக்களும் ஒரே சமயத்தில் ஒருமுகமாக எச்சில் துப்பினால் ஒரு கடலாகி வெள்ளைக்காரரை மிதக்கச் செய்துவிடும்" என்று அடிக்கடி கூறுவார்கள். அதாவது அவ்வளவு பெருங் கூட்டமாக வுள்ள மக்கள், கூட்டாகச் சிறு எச்சிலைத் துப்பினால்கூட அது பெரும் .வெள்ளமாகும்.

— 47 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/53&oldid=493025" இலிருந்து மீள்விக்கப்பட்டது