பக்கம்:பூவும் கனியும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக



இறுமாந்து அமர்ந்திருப்பான். 9’ 4" தாண்டிய அவனே அடுத்த ஆண்டு 9’ 2" தாண்டும் நிலைக்கு வந்திருந்தாலும் வந்திருப்பான். இப்படியே தேய்ந்து கொண்டு போனாலும் போவான். போட்டி இருப்பது நல்லது. நல்ல முறையிலே ஒழுங்கான முறையிலே போட்டியிருந்தால் மனிதனுடைய ஆற்றல்கள் வளர்வதற்குத் தூண்டுகோலாக இருக்கும். அந்த வகையில் நல்ல முறையிலே போட்டியை வளர்த்திருக்கிறீர்கள்.

வெற்றியும் வெறியும்

'வெற்றி பெற்றுவிட்டோம்’ என்று மட்டும் ஏமாந்து இருந்துவிடாதீர்கள். வெற்றி என்ற சொல்லிலே இடையிலிருக்கும் வல்லின மெய் போய்விட் டால் என்னவாகும்? வெறியாக மாறிவிடும். ஏமாந்து தன்னடக்கம்விட்டு, நிதானத்தை இழந்துவிட்டால் மனிதன் வெறிகொண்டவனாகி விடுகிறான். அந்த வெறி அவனுக்குத் தோல்வியை உண்டாக்கும்.

நெற்பயிரும் நல்வாழ்வும்

நீங்கள் பள்ளிக்கூடத்திலே பெறுகிற வெற்றி வாழ்க்கை முழுவதற்கும் வெற்றியாகவே இருக்கவேண்டும். உங்கட்கு வெற்றி ஏற்பட ஏற்பட அமைதியும் அடக்கமும் வளரவேண்டும். நாற்று நடும்

— 69 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/75&oldid=493100" இலிருந்து மீள்விக்கப்பட்டது