பக்கம்:பூவும் கனியும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



பான்மையினை இன்றும் நாம் பார்க்கிறோம். இந்தப் பண்பு படித்தவர்களிடமும் பணக்காரர்களிடமும் நாட்டுமக்கள் அனைவரிடமும் பரவ வேண்டும்; வளர வேண்டும். பள்ளிகளிலே சோறு போடுவது என்றால் யாருக்கும் பாரம் இல்லை. பகுத்துண்ணும் பண்பே வேண்டும்.

செல்வர்கள் நிறையத் தரட்டும். ஏழை எளியவர்கள் தங்களால் இயன்றவரை கொடுக்கட்டும். பல துளிகள் சேர்ந்துதான் பெருவெள்ள மாகிறது. இப்படிச் சேர்த்துச் சேர்த்து, வளம் உடைய எதிர்கால மன்னர்களை உருவாக்கும் பணிக்கு உதவுங்கள்; பசியறியாப் பாலகர்கள் பள்ளிகள்தோறும் நிறைஙந்திருக்கும் நிலையினை ஏற்படுத்துங்கள். அப்போது தான் கல்வியின் தரம் உயரும். நல்ல அறிஞர்கள் தோன்றுவார்கள். போட்டி ஒழியும். பகைமை அழியும்.

"என்னரும் தமிழ்நாட் டின் கண்
எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னரும் கலைஞா னத்தால்,
பராக்கிர மத்தால், அன்பால்
உன்னத இமமலை போல் ஓங்கிடும்
கீர்த்தி யெய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக்கேட் டிடல்எஙந் நாளோ"

— 78 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/84&oldid=492961" இலிருந்து மீள்விக்கப்பட்டது