உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை 78 9 இந்த பூரீருத்திர தமிழாக்கத்தில் கீழே குறிக்கப்பெற்ற எண்ணுள்ள மந்திரங்கள் சிந்திக்கத்தக்கன. தஸ்கரானாம் என்று தொடங்கும் 3.1.3; 3.1.4; 3.1.5; 3.1.6; 3.1.7; 3.1.8; ஆகிய மந்திரங்களின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. வில்லில் தொடுப்பதற்காகக் கையில் அம்பை வைத்துக் கொண்டிப்பவரும் அம்பறாத்துணியை யுடையவரும் கொள்ளைக்காரர்களின் தலைவருமாகிய உருத்திரனுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம். (3.1.3) வஞ்சகராகவும் படுவஞ்சகராகவும் நயவஞ்சனையால் திருடுபவர்களின் தலைவராகவும் உள்ள உருத்திரனுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம். (3. 1.4) திருடுவதற்காக உள்ளே சஞ்சரிப்பவராகவும் திருடுவதற்காக வெளிப்போந்து சஞ்சரிப்பவராயும் வனங்களில் வழிபறிப்பவர்களின் தலைவராகவும் உள்ள உருத்திரனுக்கு முன்னும் பின்னும் நமல்காரம். (3. 1.5) ஆயுதங்களால் தங்களை ரகசித்துக் கொள்பவர்களாகவும் பிறரை இம்சிப்பவர்களாகவும் உளவாளியாயிருந்து யஜமானரின் தானியங்களைத் திருடுபவர்களின் தலைவராகவும் உள்ள - உருத்திரனுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம். (3.1.6) வாளேந்தியவர்களாகவும் திருடுவதற்காக இரவில் சஞ்சரிப்பவர்களாகவும் பிறரைக் கொன்று பொருளை அபகரிப்பவர்களின் தலைவராகவும் உள்ள உருத்திரனுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம். (3.1.7) தலைப்பாகை யணிந்தவராகவும் மலைவாசியாகவும் வயல்களிலும் வீடுகளிலும் திருடுபவர்களின் தலைவராகவும் உள்ள உருத்திரனுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம் (3.1.8) இருவினை தொடரும் மானுட உலகில் பிறப்பவராகவும்.(6.1.5) இந்திரன், வருணன் முதலியவர்களுக்குச் செய்யப்படுகின்ற யாகங்களில் பயன்படும் ப்ொருள்களுக்கு முரண்பட்ட பொருள்கள் இங்குப் பயன்படுத்தப்படுவது ஆராய்ச்சிக்குரியது. மந்திரங்கள் என்ற பெயரில் கூறப்பட்ட மேலே காட்டிய மந்திரங்கள் போன்ற பல மந்திரங்கள் பூரீருத்திரத்தில் இடம் பெறுகின்றன. இவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது பூரீருத்திரம் உருத் திரனை உண்மையிலேயே புகழ்ந்து பாடும் கருத்தில் இயற்றப் பட்டதா என்பது ஆராய்ச்சிக்குரியது. -