உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்பெருநூல் இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது. முதல் பதினான்கு இயல்கள் ஒருபகுதி. அடுத்துள்ள பத்து இயல்கள் இரண்டாம் பகுதி. முதற்பகுதியில் பெரிய புராணம் போன்ற காப்பியத்தில் அமைந்துள்ள சூழல் உருவாவதற்கான காரணங் களைத் தக்க முறையில் ஆராய்ந்து ஆசிரியர் கூறுகிறார். பெரிய புராணத்தை ஒரு காப்பியம் என்ற முறையிலே இரண்டாம் பகுதியில் கண்டுணரலாம். தமிழ் இலக்கியம், சமயம், தத்துவம், வரலாறு ஒப்பிலக் கியம், எனப் பலதுறைகளின் கலைக் களஞ்சியம் போல அ.ச.ஞா வின் "பெரியபுராணம் ஓர் ஆய்வு” அடிை கிறது. - மா.போ. குருசாமி