பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பெரியபுராண ஆராய்ச்சி இந்த அந்தாதியின் கீழ் உள்ள செய்யுள்-ta வெள்ளானை மீது சுந்தரர் இவர்ந்து கயிலை சென்றமை (b) சேரமான் பரிமீது சென்றமை (c) சேரமான் கயிலையில் ஆதியுலா அரங்கேற்றினமை (d) அவர் தில்லையில் பொன்வண்ணத்து அந்தாதியைப் பாடினமை என்ற குறிப்புக்கள் கொண்டுள்ளது. இச்செய்யுள் சேக்கிழார்க்குச் சிறந்த குறிப்புக்கள் நல்கியதாகும். நக்கீரர் பாடிய நூல்கள் அவற்றுள் சண்டீசர், சாக்கியர், கோச்செங்கணான் இவர்தம் பக்திச் சிறப்பொன்றே பாராட்டப்பட்டுள்ளது. நக்கீரர் கண்ணப்பரைப் பற்றித் 'திருமறம் பாடியுள்ளார். அது 157 வரிகளைக் கொண்டது. அதனில், (1) கண்ணப்பர் இயல்பாகவே நாடோறும் சிவனைப் பூசித்தபிறகே உண்ணுதல் (2 காளத்தி மலையில் அவர் நாயுடனே தங்கிப் பூசை செய்திருந்தமை (3) சிவனது ஒரே கண்ணில் தன் இரண்டு கண்களையும் அப்ப முயன்றமை என்பன குறிக்கத் தக்கவை. கல்லாடர் கண்ணப்பரைப் பற்றிப் பாடிய 'திருமறம் 38 வரிகளை உடையது. நக்கீரர் குறியாதன சில இவர் குறித்துள்ளார். அவை 1 காளத்தியில் பூசை செய்த மறையவர் பெயர் கோசரி என்பது 2 லிங்கத்தின் இரண்டாம் கண்ணில் வெளிப்பட்ட குருதியைத் தடுக்கவே கண்ணப்பர் தமது இரண்டாம் கண்ணைப் பெயர்க்க முயன்றமை என்பன. . பட்டினத்தார் . இவர் பாடியன (1 கோயில் நான்மணி மாலை 12 திருக்கழுமல மும்மணிக் கோவை (3) திரு இடைமருதூர் மும்மணிக் கோவை (4) திருஏகம்பம் உடையார் திரு அந்தாதி 5 திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது என்பன. இவற்றுள் சண்டீசர், சிறுத்தொண்டர், சாக்கியர், அப்பர், சம்பந்தர் சுந்தரர். இவர்களது பக்திச் சிறப்புப் பாராட்டப்பெற்றுள்ளது. "சம்பந்தர் தந்தையோடு கோவிலுக்கு வந்தபோது பசி வருத்த அன்னாய் என்று அழைப்ப முன்னின்று சிவன் ஞான போனகம் தர, தந்தை முனிந்து தந்தார் யாவர்? எனச் சிறுவராய சம்பந்தர், அவனைக் காட்டுவேன்' என்று கூறித் தோடுடைய செவியன் என்று பாடச் சிவபிரான் காட்சி அளித்தான்” என்பது நம்பி பாடிய நூல்கள் 10 - -. அவற்றுள் 6 நூல்கள் சம்பந்தரைப் பற்றியவை ; ஒன்று அப்பரைப் பற்றியது ; ஒன்று திருத்தொண்டர் திரு அந்தாதி , ஒன்று கோயில் திருப்பணியர் விருத்தம். இவர் சம்பந்தரைப்பற்றிப் பாடியவை-: (1) சம்பந்தர் திரு அந்தாதி 12 சம்பந்தர் திருச்சண்டை விருத்தம் 3 சம்பந்தர் திரு