பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 . பெரியபுராண ஆராய்ச்சி இரண்டு இடங்களில் கூறப்பட்டுள்ளதும் அவன் சென்ற பரி சேரமான், வரகுணண் II இவர்கள் வாகனங்களுடன் சென்றதாகக் கூறப்படுவதும் வேறு சோழ அரசன் குறிப்பிடப்படாமையும் நோக்க திருநீற்றுச்சோழனான முதற் குலோத்துங்கன் தில்லையில் இறைவன் உலா வருதலை முதன்முதல் சிறப்பாகச் செய்து காட்டினவனாகலாம் எனக்கோடல் பொருந்தும். அவனைப்பற்றிய இடங்களில் அவனது படிமம் பரிமீது சென்றது என்ற பொருளே அறியக்கிடப்பதால், அவனுக்குப் பிற்பட்ட காலத்தில் இந்நூல் பாடப்பட்டதாகலாம் ; ஆயின் தில்லையைப் பற்றிய இந்நூலில் தில்லையில் செய்யப்பட்ட பெரிய புராணமோ, அதனைச் செய்த சேக்கிழாரோ, அதனைச் செய்வித்த சிவநெறிச் செல்வனான இரண்டாம் குலோத்துங்கனோ குறிக்கப்படாமையின் இது சேக்கிழார்க்கு முற்பட்ட நூலெனக் கொள்ளலாம் * அங்ஙனம் கொண்டு இதனை ஆராய்வோம். இந்நூலிற் குறிக்கப்பட்ட செய்திகளாவன: சிற்றம்பலம் பொன்தகடு ஒவ்வொன்றன்மீதும் சிவாயநம என்ற ஐந்தழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருந்தன (2 உலாவில் பரசமய வாதுவென்ற பிள்ளை சம்பந்தர் வஞ்சனைகள் வென்றார். அப்பர், துது சென்றுவா’ என்ற தோழன் கந்தரர், தென்னற்கு வாய்த்த திருவாதவூர் (மாணிக்கவாசகர் இவர்கள். இந்த முறைப்படியே குறிக்கப்பட்டுளர் 3 ஆதி சிவாகமப்படி தில்லையில் பூசை நடந்தது" (4) சண்டீசர் தந்தை இருதாள் துணித்த சைவத்திருமேனி எனப்பட்டார்’ (5) சிவன் உலாப்போகையில் முன்புறம் ta வாகீசர் தேர் (b) சுந்தரர் தேர் (c) திருவாசகப் புலவன் தேர்கள் சென்றன . ஆதியுலாச் சொன்ன நரபதியும் வரகுணனும் சேவிப்பச் சிவன் உலாப்டோனான்" (6) இவர் படிமங்கட்குமுன் மூவர் தமிழும் வேதமும் முரசமுடன் முழங்கப் போயின இவ்வுலாவில் a சிவன் கந்தரர்க்காகத் தூது சென்றமை (b) கோட்புலியார் பிள்ளையைக் கூறாக்கினமை (cl சிறுத்தொண்டர் பிள்ளையைக் கொன்று சமைத்த முழுவிவரம்" (d) சம்பந்தர் சைவத்தைப் பரப்பப் பாண்டி நாடு சென்றமை" என்பன குறிக்கப்பட்டுள. . இவற்றுள் சுந்தரர்க்காக இறைவன் தூது சென்றமை (2 கோட்புலியார் பிள்ளையைக் கூறாக்கினமை 3 சிறுத்தொண்டர் மகனை அரிந்து விருந்தளித்த முழு விவரம் ஆகிய மூன்றும் நம்பி பாக்களில் தெளிவாகக் குறிக்கப்படாதவை. ஆகவே, இவை சேக்கிழார்க்குப் பெருவியப்பு ஊட்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை. இக்குறிப்புக்கள் சேக்கிழாரால் நன்கு விளக்கப்பட்டிருந்தலை நோக்க இச்செய்திகள் கூறும் உலாப்போன்ற அக்கால நூல்கள் சில சேக்கிழார்க்குக் கிடைத்தனவாகலாம் என்று எண்ண இடமுண்டாதல் காண்க."