பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பெரியபுராண ஆராய்ச்சி சிலவும் தவறின்றிக் கூறப்படலால், அவை, சேக்கிழார்க்குப் பிற்பட்ட ஒன்றிரண்டு நூற்றாண்டுகளில் செய்யப்பட்டன ஆகலாம் எனக் கோடல் தவறாகாது. மேலும், புகழ்பெற்ற உமாபதிசிவனார் தவறின்றிப் பாடிய திருத்தொண்டர் புராண சாரத்திற்குப் பிறகு, பல தவறுகள் கொண்ட திருத்தொண்டர் புராண வரலாறு பெயர் தெரியாத ஒருவரால் பாடப்பட்டது என்பது பொருத்தமுடையதன்று. ஆதலால், திருத்தொண்டர் புராண வரலாறு, மிகுந்த சைவப்பற்றும் சமணசமய வெறுப்பும் கொண்ட ஒருவரால் உமாபதி சிவாசாரியார்க்கு முன்பே பாடப்பெற்றது; அவராலேயே திருமுறை கண்ட புராணமும் பாடப்பெற்றது எனக் கோடல் பொருத்தமாகும். எனவே, இப்பெயர் தெரியாத ஆசிரியர் கி.பி. 13 ஆம் நூற்றாண்டினர் எனக் கொள்ளலாம். இங்ங்ணம் கொள்ளின், சிறந்த புலவரும் சைவ சித்தாந்த ஆசிரியருமாகிய உமாபதிசிவனார்க்கு நிறையுண்டாகுமே அன்றிக் குறை உண்டாகாமை காண்க. உமாபதிசிவத்தின் மூன்று சிறு நூல்களையும் அவற்றின் தொடர்பான சேக்கிழார் புராண வரலாற்றையும் திருமுறை கண்ட புராணத்தையும் கண்ட பிற்காலத்தார். பின்னவையும் உமாபதிசிவமே பாடினார் எனக்கொண்டிருத்தல் இயல்பே." - பொருந்தும் செய்திகள் இவ்வாறு பொருந்தாச் செய்திகள் சில இருப்பினும், சேக்கிழார் புராணம் சேக்கிழார் வரலாற்றை அறிய உறுகருவி என்பதை மறுத்தற்கில்லை. ஆதலின், அதன்கண் காணப்படும் பெரும்பாலும் நம்பத்தக்க செய்திகளாவன: 1. சேக்கிழார் குன்றை நாட்டுக் குன்றத்தூரினர்; வேளாளர் மரபினர்; அவர் தம்பி பாலறாவாயர். - குன்றத்தூரில் சேக்கிழார் கோவில் இன்றும் இருக்கின்றது. அதற்கு அண்மையில் பாலறாவாயர் குளம் இருக்கின்றது. சேக்கிழார் மரபினர் அங்கு வாழ்கின்றனர். х 2. சேக்கிழாரை ஆதரித்த அரசன் அநபாயன் என்பதைச் சிறப்புப் பெயராகக் கொண்டவன். 3. சேக்கிழார் சோழ அரசியலில் தலைமை அமைச்சராக இருந்தவர். அங்ங்னம் இருந்து, உத்தம சோழப் பல்லவராயன் என்ற பட்டம் பெற்றனர். அங்ங்னம் அரசற்கு அடுத்த உத்தியோகத்தில் இருந்தமையாற்றான் அவருடைய சைவப்பற்றும் அவர் அறிந்த நாயன்மார் வரலாற்றுச் செய்திகளும் நிறைந்த தமிழ்ப்புலமையும் அரசனும் இளவரசனும் அறிய வாய்ப்புண்டானது எனக் கோடல் பெரிதும் பொருத்தமே ஆகும். 4. அவர் சோணாட்டுத் திருநாகேச்சரத்தில் ஈடுபட்டவர். அந்நினைவு கொண்டு தமதுரில் அப்பெயரால் கோவில் கட்டினவராகலாம். குன்றத்தூரில் இப்பெயரால் ஒரு கோவில் இருக்கின்றது.