பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பெரியபுராண ஆராய்ச்சி அப்பர் அங்கு உண்ணாவிரதம் இருந்தார். சோழ அரசன் சமணரை அகற்றி லிங்கத்தைத் தரிசிக்குமாறு அப்பர்க்கு வசதி செய்து தந்தான் என்பது சேக்கிழார் கூற்று" 2. அப்பர், சம்பந்தர் காலத்து அடியாரான குங்குலியக் கலயர், திருப்பனந்தாள் கோவிலில் சாய்ந்திருந்த லிங்கத்தை நிமிர்த்த முடியாது சோழ அரசன் வருந்துவதைக் கேள்வியுற்று, அங்குச்சென்று. தம் பக்தி வலிமையால் அதை நிமிர்த்தி அரசன் பாராட்டுக்கு உரியராயினார் என்பது சேக்கிழார் கூற்று. இச்சோழன் மங்கையர்க்கரசியார்க்குத் தந்தை அல்லது உடன்பிறந்தானாக இருக்கலாம். பழையாறை பழையாறை கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஊர். அது பல்லவர்காலச் சோழர்க்கு அமைந்த தலை நகரங்களில் ஒன்றுபோலும் அஃது அக்காலத்தே பெரிய நகரமாக இருந்தது. பட்டிச்சுரம், திருச்சத்திமுற்றம், திருமேற்றளி, வடதளி. தென்தளி என்பன அங்கு இருந்த கோவில்கள். இப்பொழுது பட்டிச்சரமும் திருமேற்றளியும் தனி ஊர்களாக மாறிவிட்டன." பிற்காலச் சோழரும் பழையாறையைச் சிறப்புச் செய்தனர். அங்கு அழகிய அரண்மனை இருந்தது. சேக்கிழார் காலத்திலும் அரச மரபினர் அங்கு வாழ்ந்து வந்தனர்." நெல்வேலிப் போர் (1) சம்பந்தர் பாண்டியனையும் பாண்டிய நாட்டையும் சைவ நெறியில் திருப்பிய பிறகு பல ஆண்டுகள் கழிந்தன. ஒரு பொழுது தாமாக அமர்வேண்டித் தூர நாட்டு அரசர் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார் : நெல்வேலியில் போர் நடந்தது (2) பகைவர் படை கடல் போன்றது போரில் இருதிறத்தார் வீரரும் இரண்டு கடல்கள் போலப் போரிட்டனர்; கரிகள் கரிகளோடு போரிட்டன : பரிகள் பரிகளோடு போரிட்டன. வெற்றிமகள் இருவர்பக்கமாக ஊசலாடிக் கொண்டிருந்தாள் (3) இறுதியில் வடபுலத்து முதல் மன்னர் படை சரிந்தது. பாண்டியன் வெற்றி பெற்றான். இது சேக்கிழார் கூறும் விவரம்’ சேக்கிழார் வடபுலம் என்பது, பல்லவர் நாட்டுக்கும் வடக்கே யுள்ள சாளுக்கிய நாட்டைக் குறிக்கும் என்பது முன் சிறுத்தொண்டர் புராணத்துட் கூறிய வடபுலத்து வாதாபி என்ற தொடரால் அறிக. அறியவே, நெடுமாறனோடு நெல்வேலியிற் போரிட்ட பகைவன் சாளுக்கிய அரசன் என்பது பெற்றாம். நெடுமாறன் காலம் கி.பி. 640-680 கி.பி. 642 இல் வாதாபிப் படையெடுப்பு நடந்தது. அது முதல் கி.பி. 654 வரை வாதாபி பல்லவர் கையில் இருந்தது. அதனால், சாளுக்கியர் வலியற்றவராகக் கிடந்தனர். வாதாபிப் படையெடுப்பில் தோற்ற இரண்டாம் புலிகேசியின் மகனான முதலாம்