பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் பற்றிய செய்திகள் 173 4. சமணர் கழுவேற்றம் (1) சம்பந்தரிடம் வாதில் தோற்றால் பெருங்குன்றத்தைச் சேர்ந்த எண்ணாயிரம் சமணர் தாம் கழு ஏறுவதாகக் கூறினர் சமணர் கூறியபடியே பாண்டியன் அமைச்சரைக் கொண்டு செய்வித்தான் (2 சம்பந்தர் வேந்தன் செய்கை மிகையன்று என்றெண்ணி விலக்காதிருந்தார் என்பன சேக்கிழார் கூற்றுகள்." நம்பியாண்டார் நம்பி இச் சமணர் கழு ஏறியதைப் பல இடங்களிற் குறித்துள்ளார்." இதனைச் சான்றாகக் கொண்டே சேக்கிழார் கூறினார் ஆதல் வேண்டும். பெரிய புராணத்தின்படி, (1) சமணர் அப்பர்க்குக் கொடுமை செய்தனர்; பல்லவ மகேந்திரவர்மன் அதற்கு உடந்தையாக இருந்தான் (2) சமணர் சம்பந்தர் மடத்திற்குத் தீ வைத்தனர் (3) பல்லவ மகேந்திரவர்மன் சைவனாக மாறியதும் சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துத் தள்ளினான் (4) நெடுமாறன் சைவனாக மாறியதும் சமணரைக் கழுவேறச் செய்தான். இவற்றுள் முன்னவை இரண்டும் சமணர் சைவர்க்குச் செய்த கொடுமைகள் பின்னவை இரண்டும் சைவர் சமணர்க்குச் செய்த கொடுமைகள், இத்தகைய கொடுமைகள் பல்லவர் காலமாகிய நாயன்மார் காலத்தில் நடந்ததுண்டா? என்பது ஆராயத்தக்கது. வைணவர் கொடுமை - இலக்கியச் சான்று திருமங்கையாழ்வார் நாகைப் பெளத்த விஹாரத்தில் இருந்த பொன்னாற் செய்யப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து, அதைக்கொண்டு பல கோவில் திருப்பணிகள் செய்தனர் என்று குருபரம்பரை கூறுகிறது. இவரது காலத்தவர் என்று கருதப்படும் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் அமயம் வாய்ப்பின் பெளத்தர்-சமணர் தலைகளை அறுப்பதே நல்லதென்ற கொள்கை உடையவர் என்பது அவர் பாடலால் அறியலாம். வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகிக் குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல், தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமா நகரு ளானே" பட்டயச் சான்று 'தர்ம சாத்திர முறைக்கு மாறான நடவடிக்கைக் கொண்ட (not according to the law of Dharma) lošāongs oftāgī (destroyed), -96 stadt