பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பெரியபுராண ஆராய்ச்சி 2. சேக்கிழார் சம்பந்தர் புராணத்தில் (செ. 773) கூறும் கந்து சீறு மால் யான்ன என்ற தொடர் - கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு என்ற புறநானூற்று (செ178)த் தொடருடன் ஒன்றுபடல் காண்க. அகநானுறு 1. சேக்கிழார் கண்ணப்பர் புராணத்தில் செ9 'இரும்புலி எயிற்றுத் தாலி என்றமை புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி என்ற அகநானுற்றுச் செய்யுள் (7 தொடரோடு ஒன்று படல் காண்க. 2. முருக நாயனார் புராணத்தில் (செ4) வண்டு பாடப் புனல் தடத்து மலர்ந்து கண்ணிர் அரும்புவன என்று கூறியிருத்தல் - வண்டுபோ தவிழ்க்குந் தண்கமழ் புறவு என்ற அகநானூற்றுச் செய்யுள் 74 தொடரை ஒத்திருத்தல் காண்க நற்றிணை - கண்ணப்பருடன் சென்ற வேட்டை நாய்கள் தம் நாக்களை நீட்டியும் சுருக்கியும் தொங்க விட்டுக் கொண்டு ஓடிய காட்சி-வேடர் தம் வில்மீது பொருந்தும் வெற்றி மகளது சிவந்த பாதம் முன்போய் நீள்வதுபோல இருந்தது (செ.69) என்ற கருத்து முயல்வேட் டெழுந்த முடுகுவிசைக் கதநாய் நன்னாப் புரையும் சிறடி என்ற நற்றிணைச் செய்யுள் (252 அடிகளோடு ஒத்துவரல் காண்க. ஐங்குறுநூறு திருநீலகண்ட நாயனார் பரத்தையைச் சேர்ந்து மீண்டதை அறிந்த மனைவியார் அவரோடு போகம் விரும்பாராய், செ56). 'என் அழகு இளமை முதலியன) வீணாகப் போயினும் சரி, என்னைத் தீண்டலாகாது செ56. என்று ஆணையிட்ட கருத்து பிறர் தோய்ந்த உனது மார்பை யான் தழுவேன் என்ற ஐங்குறுநூற்றுச் செய்யுள் அடிகளின் கருத்துடன் ஒன்றுபடல் காணத் தக்கது.