பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பெரியபுராண ஆராய்ச்சி இன்னபிற காரணங்களால், மூன்றாம் குலோத்துங்கன் சேக்கிழார் காலத்தவன் ஆகான் என்பது அறியப்படும். 'அநபாயன் இரண்டாம் குலோத்துங்கனே சேக்கிழார் புராண ஆசிரியர், சேக்கிழார் காலத்து அரசனை "அபயன்’ எனவும், அபநாயன்” எனவும் குறித்துள்ளார் என்பதை முன்பே கூறினோம் அல்லவா? சேக்கிழார் பத்து இடங்களில் தம் காலத்தரசனைக் குறித்துள்ளார். அப் பத்து இடங்களிலும் அநபாயன் என்பதையே சிறப்பாகக் குறிக்கின்றார். இரண்டு இடங்களில் "அபயன்’ என்பதைக் குறித்துள்ளார். இனி இம்மன்னைப் பற்றிப் பெரிய புராணம் கூறுவனவும் கூத்தர் பாடிய உலா, பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி ஆகிய மூன்றும் கூறுவனவும் முறையே காண்போம்.