பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பெரியபுராண ஆராய்ச்சி 1. பாம்புக்கடி அரவு தீண்டப்பட்ட அப்பூதியடிகளின் மகன் உடலில் விஷவேகம் ஏறியதைச் சேக்கிழார் கூறுகையில் எளிவிடம் முறையே ஏறித் தலைக்கொண்ட ஏழாம் வேகம் என்பதைக் குறிப்பிட்டு, "அம்மகனுடைய பல், கண், உடல் கருகித் தீய்ந்தன; உரை குழறியது. ஆவி விடக் கொண்டு மயங்கி வீழ்ந்தான்" என்று முடித்தனர். "பாம்பின் விடம் இரத்த ஓட்டத்திற் கலந்து விடுகிறது. அவ்வோட்டம் கடித்த இடத்திலிருந்து இரத்தக் குழாய்களின் வழியே இரத்தாசயத்திற்குப் போய் அங்கிருந்து மீள வெளி வந்து உடம்பிற் பரவுவது ஓர் ஓட்டம் ஆகும். அதற்கு ஒரு வேகம் என்பது பெயர். அவ்வாறு ஒரு முறை ஒட்டம் வந்து முடிந்தால் உடம்பில் உள்ள ஏழு தாதுக்களில் ஒரு தாது வலிகெடும். இப்படி ஏழு முறை சுற்றிவந்தால் ஏழாம் வேகம் தலைக்கேறியதாகச் சொல்லப்படும். அப்பொழுது ஏழு தாதுக்களும் வலிகெடும். பல், கண், உடல் விடத்தினால் கருகும், உணர்வு நீங்கும்" என்பது மருத்துவர் கூற்று. இனி இந்த வேகங்களின் தன்மையை ஒவ்வொன்றாகக் காண்போம். முதலாம் வேகம் விஷம் ரஸ் தாதுவில் கலக்கிறது. உடனே நிகழ்வன, வாய் நீர் வடிதல், வாந்தி வரல், உடம்பெரிச்சல், பல எண்ணங்கள் தோன்றல், பல் அடிக்கடி கிட்டிக்கொள்ளுதல், களைப்புண்டாதல். இரண்டாம் வேகம் இரத்தம் கெடுதல், உடல் நடுங்குதல், நிறம் மாறுதல், உடல் மறத்துப் போதல், கண் இருண்டு போதல், தலை சுற்றுதல், மூர்ச்சை அடைதல். மூன்றாம் வேகம் தசை கெடுதல், அரிப்புண்டாதல், வீங்குதல், உடம்பில் தடிப்பு உண்டாதல், வட்டமான தழும்புகள் தோன்றுதல். நான்காம் வேகம் புள்ளிகள் உண்டாதல், முள்போலத் தழும்புகள் கிளம்பல், வீக்கம் உண்டாதல், மூச்சுத் திணறல், மருண்ட பார்வை. ஐந்தாம் வேகம் பார்வை மழுங்கல் ஆறாம் வேகம் விக்குள் உண்டாதல்