பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 207 2. சேக்கிழார் பாடியுள்ள பாக்கள் எளிய நடையில் இயன்றவை: அங்கங்கே நிறுத்தக் குறிகள் பெய்யப்படின் சிறு வாக்கியங்களாக அமைதலைக் காணலாம். சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச் செயிர்த்து நோக்கி, என்னிது மொழிந்த வாநீ? யான்வைத்த மண்னோ டன்றிப் பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினும் கொள்ளேன்; போற்ற முன்னைநான் வைத்த ஒடே - கொண்டுவா என்றான் முன்னோன். 1 (திருநீலகண்டர் புராணம் 24) மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர்தாம் அல்லர்: நற்பெருந் தெய்வ மாதல் நானறிந் தகன்ற பின்பு பெற்றஇம் மகவு தன்னைப் பேரிட்டேன். ஆத லாலே பொற்பதம் பணிந்தேன்; நீரும் போற்றுதல் செய்மின் என்றான். 2 - (காரைக்கால் அம்மையார் புராணம் 47) வளம்பொழில்துழ் வைப்பூர்க்கோன் தாமன் எந்தை; மருமகன்மற் றிவனவற்கு; மகளிர் நல்ல இளம்பிடியார் ஒரேழுவர். இவரில் மூத்தாள் இவனுக்கென் றுரைசெய்தே ஏதி லானுக்(கு) உளம்பெருகத் தனம்பெற்றுக் கொடுத்த பின்னும் ஒரொருவ ராகஎனை ஒழிய ஈந்தான்; தளர்ந்தழியும் இவனுக்காத் தகவு செய்தங்(கு) அவரைமறைத் திவன்தனையே சார்ந்து போந்தேன். 3 மற்றிவனும் வாளரவு திண்ட மாண்டான்; மறிகடலிற் கலங்கவிழ்த்தார் போல நின்றேன். சுற்றத்தார் எனவந்து தோன்றி என்பால் துயரமெலாம் நீங்கஅருள் செய்தி என்னக் கற்றவர்கள் தொழுதேத்தும் காழி வேந்தர் கருணையினால் காரிகையாள் தனக்கு நல்கப்