பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 215 象 - 4. புகழ்ச் சோழருடைய வீரரது போர்ச் சந்தம் கயமொடு கயமெதிர் குத்தின அயமுடன் அயமுனை முட்டின வயவரும் வயவரும் உற்றனர் வியனமர் வியலிடம் மிக்கதே. Gഖു மாறுற் றவிறற் படைவாள் அதிகன் நூறுற்றபெரும் படைநூழில்படப் பாறுற் றனயிற் பல்பற் றறவிட் டேறுற் றனன்ஒ டிஇருஞ் சுரமே. - (புகழ்ச் சோழர் புராணம் 20 , 29) 9. நயம்பட வுரைத்தல் என்பது சேக்கிழார்பால் சிறந்து விளங்கக் காணலாம். திருநீலகண்டர் பரத்தைபால் நண்ணியிருந்தார் என்பதை ஆசிரியர் முதலில் வெளிப்படக் கூறாது. இளமை மீதூர இன்பத் துறையினில் எளியர் ஆனார்" என்று குறித்தனர். சிவபிரானால் இளமைப் பருவம் பெறப்போகும் பேறுடையர் ஆதலால் இன்பத் துறையினில் எளியர் ஆனார். அவர்மீது குற்றமில்லை' என்பதொரு பொருளும் கொள்ளக்கிடத்தல் காணலாம். இங்ங்ணம் நயம்பட வுரைத்து இருபொருள் தோன்றக் கூறும் ஆற்றல் சேக்கிழார், கம்பர் போன்ற பெரும் புலவர்கள்பால் காணத்தக்கது. 10. நானிலம் - ஐந்திணை இவற்றின் சிறப்பியல்புகளைச் சேக்கிழார் கூறிச் செல்லல் கவனிக்கத்தக்கது. திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் ஏறத்தாழ 42 (6-46) செய்யுட்கள் தொண்டை மண்டலத்து நிலப் பிரிவுகள் - திணை வகைகள்-அந்நிலங்களில் அமைந்த தலங்கள், அவற்றின் சிறப்புகள் முதலியவற்றை விளக்கிச் செல்லுதல் படித்தின்புறத் தக்கது. (1) சேக்கிழார் 6 முதல் 10 செய்யுள்வரை ஒவ்வொரு பாட்டிலும் குறிஞ்சிமுல்லை - மருதம் - நெய்தல் என்ற நானில இயல்பைப் பொதுவகையாகக் குறித்துச் சென்றுள்ளார். (2) பிறகு ஒவ்வொரு நிலத்தையும் சிறப்பு வகையாற் கூறத் தொடங்கி அந்நிலத்துப் பண்பும் அங்குள்ள சிறப்புடைத் தலங்களும் சுட்டிச் சென்றுளர். () குறிஞ்சி நிலத்தியல்பு (செ11), அந்நிலத்துச் சிறப்புடைய தலங்கள் (12-14). திருக்காளத்தி, திரு இடைச்சுரம், திருக்கழுக்குன்றம். (i) பாலை நிலத்தியல்பு (செ. 15) கூறப்பட்டுள்ளது (i) முல்லை நிலத்தியல்பு (செ. 16:17). அந்நிலத்துச் சிறப்புடைத் தலங்கள் (18-19) - திருமுல்லைவாயில், கலிகை மாநகர்