பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 பெரியபுராண ஆராய்ச்சி 8. சுந்தரர் தொகை பாடிய சந்தர்ப்பம் 'சுந்தரரும் அவரைத் தோழராகக் கொண்ட பிரானும் நமக்குப் புறம்பானவர் என்று விறல் மிண்டர் கூறினார் என்பதே நம்பி கூற்று சேக்கிழார் இக் குறிப்பைப் போதிய அளவு விறல் மிண்டர் புராணத்தில் விளக்கி தடுத்தாட் கொண்ட புராணத்தில் குறிப்பாகக் கூறினார். ஆயின், அறிஞர் இலக்கண விளக்கப் பரம்பரை - திருசோமசுந்தர தேசிகர் அவர்கள், "தடுத்தாட் கொண்ட புராணத்தில் தொகை பாட நேர்ந்த சந்தர்ப்பத்தைச் சேக்கிழார் 17 பாக்களில் விளக்கியுள்ளார். அப்பாக்கள் இன்றுள்ள பெரிய புராணப் பிரதிகளில் இல்லை. எம் முன்னோர் பாதுகாத்துள்ள பழைய பெரிய புராண ஏட்டில் உள்ளன" என்று கூறி அப்பாக்களைக் காட்டி இப்பதினேழுபாக்களையும் தடுத்தாட்கொண்ட புராணத்திற் கூறி விட்டமையாற்றான் சேக்கிழார் விறன்மிண்டர் புராணத்தில் தொகைபாட நேர்ந்த காரணத்தை விளக்காது சென்றார்" என்று கூறினார்’ "சுந்தரர் பரவையார் வீட்டிலிருந்து துர்த்த வேடத்துடன் அடியாரைக் கண்டு வணங்காமல் நேரே கோவிலுக்குட் சென்றார். அது கண்ட விறல் மிண்டர் அவரைச் சினந்து கடிந்தார். பலர் தடுத்தும் விறல்மிண்டர் கேட்டிலர். சுந்தரர் வருத்தத்துடன் கோவிலுக்குட் செல்ல, இறைவனை அங்குக் காணாது வருந்தினார். பிறகு இறைவன் முன் தோன்றி, அடியாரைப் பாடுக என்று கூறச் சுந்தரர் தொகை பாடினார்" என்பதே அப் பதினேழு பாக்களின் சத்துப் பொருள். இச் செய்தி கி.பி. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பால் குருகி - சோமநாத கவியால் செய்யப் பெற்ற பசவ புராணத்திலும் (தெலுங்கு காணப்படுவது இங்கு அறியத்தகும். சேக்கிழார்க்குச் சில ஆண்டுகட்குப் பிறகு இச் செய்தி தெலுங்கு நாட்டிற் பரவி இருந்ததெனின், இது சேக்கிழார் காலத்தில் தமிழ்நாட்டிலும் பரவி இருந்ததாதல் வேண்டும். இதன் வன்மை - மென்மைகளைச் சேக்கிழார் ஆராய்ந்தவராகலாம். சுந்தரர் - நம்பி இவர்கள் பாடிய குறிப்புகளையே ஆராய்ந்து தள்ளத்தக்கவற்றைத் தள்ளிவிட்ட சேக்கிழார் இக் கர்ண பரம்பரைச் செய்தியையும் ஆராய்ந்து, சுந்தரரது தூர்த்த வேடம் என்பதைப் பொருத்தமற்றதெனக் கருதி விலக்கி, மற்றதை ஏற்றுக் கொண்டார் என்று கோடல் 'பொருந்தும். இன்றேல், மேற்சொன்ன பசவபுராணச் செய்தியை அறிந்த பிற்காலத்தார் ஒருவர் அதனை 17 பாக்களாகத் தமிழிற் பாடிச் சேர்த்தாரெனக் கொள்ளினும் அமையும். - வேறு எந்தப் பதிப்பிலும் காணப்பெறாது. திரு தேசிகரிடம் உள்ள ஏடுகளில் மட்டும் முன்சொன்ன பதினேழுபாக்கள் வந்த வகை தெரியவில்லை. இவை வெள்ளிப் பாடல்கள் போல இடைச்செருகலாக இருக்கலாம்; இக் கருத்தினையே சிவக் கவிமணி C.K. சுப்பிரமணிய முதலியார் அவர்களும் எனக்குக் கடிதமூலம் அறிவித்துள்ளார்கள்.