பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர்கள் பார்வையில் மா.ரா. தென்னிந்திய வரலாறு பற்றியும் இலக்கியம் பற்றியும் வித்துவான் மா. இராசமாணிக்கம் எழுதியுள்ள நூல்கள் பலவும் அவரது மகத்தான சாதனைகளாகும். பல்லவர், சோழர் வரலாறுகளின் பல்வேறு கால கட்டங்களைப்பற்றி அவர் இயற்றிய இந்த நூல்கள் அயராத அவர் உழைப்புக்கு அழியாச் சின்னங்களாகும். - ஈராஸ் பாதிரியார் (1947) வரலாற்று நூல்களையும் செய்திகளையும் பயன்படுத்திக் கொள்வதில் மா. இராசமாணிக்கம் தனித்தன்மையைக் காட்டியுள்ளார். அறிஞர்கள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கும் வரலாற்று நிகழ்ச்சிகள் தொடர்பாக, யார் சொல்வதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் புதிதாக ஆராய்ந்து நுணுக்கமாகச் சீர்தூக்கிப் பார்த்து, தம்முடைய சொந்த முடிவுக்கு வருவது மா. இராசமாணிக்கத்தின் இயல்பு. தமிழில் ஆழ்ந்த புலமையும் தென்னிந்திய வரலாற்றில் அகன்ற அறிவும் ஆராய்ச்சித் திறனும் கொண்ட அறிஞர்கள் ஒரு சிலரே. அவர்களுள் மா. இராசமாணிக்கம் ஒருவர் என்பது என் கருத்து. பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை (1947)