பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரும் அவர் காலமும் 31 சேக்கிழார் மரபினர் இக்கல்வெட்டுச் செய்திகளால் அறியப்படுவன : 1. சேக்கிழார் குடியினர் தொண்டை மண்டலத்து மணவிற் கோட்டம், மேலூர்க் கோட்டம், புலியூர்க் கோட்டங்களில் வாழ்ந்து வந்தனர். 2. அக்குடியினர் சோழ முத்தரையன், உத்தம சோழப் பல்லவராயன், காளப்பாளராயன், கரிகால சோழப் பல்லவராயன், முனையதரையன்' என்ற பட்டங்கள் பெற்றுச் சோழர் அரசியலில் சிறந்த பங்கு கொண்டிருந்தனர். 3. அங்ங்னம் அரசியலிற் பங்கு கொண்டவருள் குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினரே பலர் ஆவர். 4. இம்மரபினர். திருத்தொண்டர் புராண வரலாறுடையார் குறித்தபடி, சோழராட்சி முடியுமளவும் அதற்குப் பிறகும் அரசியற் பதவிகள் தாங்கியிருந்தனர். - 5. இம் மரபினர் சைவப் பற்றுடையவராய்ப் பல தளிகட்குத் தானம் செய்த பெருமக்களாவர். - இவருட் பெரிய புராணம் பாடியவர் யாவர்? மேற்காட்டிய பட்டியலில் குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர் இரண்டாம் குலோத்துங்கன் கால முதற்றான் சோழர் அரசியலில் சிறப்புப் பெறலாயினர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரண்டாம் இராசாதிராசனது 19ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டிற் காணப்பெறும் சேக்கிழார் பாலறாவாயரும் மூன்றாம் குலோத்துங்கனது 2ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிற் காணப்பெறும் சேக்கிழார் பாலறாவாயரும் ஒருவரே எனக் கோடல் தவறாகாது. இரண்டாம் இராசராசனது 17ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிற் காணப்பெறும் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவனான் உத்தம சோழப் பல்லவராயன்' என்பவர் மேற்சொன்ன பாலறாவாயர் தமையனாரும் பெரிய புராணம் பாடியவருமாகிய சேக்கிழாராக இருக்கலாம் என்று கோடலும் தவறாகாது. என்னை? சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவரே என்பது மேலே பல சான்றுகள் கொண்டு விளக்கப்பட்டதாலும், இப்பட்டியற்படி இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலும் அவன் மகனான இரண்டாம் இராசராசன் காலத்திலும் வெளிப்பட்ட கல்வெட்டுக்களில் சேக்கிழார் புராண ஆசிரியர் குறித்த சேக்கிழார் உத்தம சோழப் பல்லவராயர்', 'சேக்கிழார் பாலறாவாயர் என்பவர் பெயர்கள் காணப்படலாலும் என்க. - சேக்கிழான் மாதேவடிகள் "மாதேவடிகள்’ என்பது சேக்கிழாரது பக்திச் சிறப்பு நோக்கி வந்த பெயராகலாம். இதற்கேற்பச் சேக்கிழார் புராண ஆசிரியர் அவரைக்