பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் காலம் 41 நந்திக்குத் தமிழரசர் திறைகட்டினவர் அடங்கியவர் என்பது கலம்பகத்தால் தெரிகிறது." சுந்தரர்குறித்த குறிப்புகள் அனைத்தும் நந்திவர்மனைப் பற்றிய குறிப்புகளோடு ஒன்றுபடல் காணத்தக்கது. அவற்றில் சிறப்பாகப் 'பல்லவர்க்குத் திறைகொடா மன்னவர் (தெள்ளாற்றில் முறியடிக்கப்பட்ட தமிழ் மூவேந்தராக இருக்கலாம் என்று நினைக்க இடமுண்டாதல் காண்க. இங்ங்னம் நினைக்கக்கூட இராசசிங்கன் வரலாற்றில் இடமின்மை முன்பே காட்டப்பட்டது. இனிச் சேக்கிழார், சுந்தரர் குறியாத சில செய்திகளைக் கழற்சிங்கர் புராணத்திற் கூறியுள்ளார். அவற்றைக் கண்டு, பின் அவற்றுக்கும் மேற்சொன்ன இருவர் பற்றிய குறிப்புகட்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் காண்போம். சேக்கிழார் கூறுவன கழற்சிங்கர் 1. சிவனைத் தவிர வேறு தெய்வத்தை வணங்காதவர். 2. வடிநாட்டுப் போரில் வெற்றி கொண்டவர். 3. நாடு அறநெறியில் வைக நன்னெறி வளர்த்தவர். 4. பல கோவில்களுக்குத் தொண்டு செய்தவர் 5. இவரது பட்டத்தரசி உரை சிறந்து உயர்ந்தவள். 6. அர்சர் திருவாரூரில் இறைவனை வணங்குகையில், இவ்வரசி பிராகாரத்தைச் சுற்றிக் கொண்டே கோவிலின் அழகைக் கவனித்து வந்தாள்; வந்தவள், பூத்தொடுக்கும் மண்டபத்தண்டை விழுந்திருந்த புதுப்பூ ஒன்றை எடுத்து மோந்தாள் (அத்தவற்றுக்காகச் செருத்துணை நாயனாரால் மூக்கு அரியப்பட்டாள்.' - இவற்றுள் 1, 2, 3, 5 இராச சிங்கற்கும் நந்திவர்மற்கும் ஒற்றுமையுடைய குறிப்புகளே ஆகும். இராச சிங்கனிடம் (அவனைப் பற்றிய இன்றுள்ள சான்றுகள் கொண்டு இருந்தவை என்று காட்ட முடியாத நிலையில் 4ம், 6ம் காண்கின்றன. ஆதலில், அவற்றை இங்கு விளக்கல் நலமாகும். 4ஆம் குறிப்பு இராச சிங்கன் கயிலாசநாதர் கோவில், ஐராவதேசுவரர் கோவில், மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோவில் போன்ற பல கோவில்களைக் கட்டினவன். ஆயின் வேறு பல கோவில்கட்குத் ‘தொண்டு’ (திருப்பணி செய்தனன் என்று கூறத்தக்க சான்றில்லை. பாடல் பெற்ற கோவில்களில் ஒன்றிலேனும் இராசசிம்மன் கல்வெட்டு இருந்ததாகத் தெரியவில்லை."