பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பெரியபுராண ஆராய்ச்சி இங்ங்னம் தம் பாக்களில் தம் காலத்தரசனை வைத்துப் பாடுதல் மரபு என்பதை அதே புகழ்ச் சோழர் புராணத்தைப் பாடிய சேக்கிழாரும் புகழ்ச் சோழர், சென்னிநீ டநபாயன் திருக்குலத்து வழிமுதலோர்’ என்று கூறுவதனாற் கண்டு கொள்க. இனிச் சிங்களநாடு பொடிபடுத்தியவன் இராசராசனே என்பது வரலாற்றுமுடிபு வழிவழியாக ஈழநாட்டின் தலை நகரமாக இருந்த அநுராதபுரத்தை இராசராசன் படைகள் அழித்துவிட்டன. அதற்குப் பதிலாகப் போலநருவா தலை நகரமாக்கப்பட்டது. இராசராசன் மாதோட்டத்தில் பெரிய சிவன் கோவிலைக் கட்டி அதற்குத் தன் பெயர் இட்டான், மாதோட்டத்திற்கு இராசராசபுரம் என்ற பெயரிட்டான் ஈழத்தை மும்முடி சோழமண்டலம் என்றழைத்தான் தஞ்சை இராசராசேச்சரத்திற்கு ஈழத்திலிருந்து பணமும் இலுப்பைப் பாலும் கொண்டுவர ஏற்பாடு செய்தான்" நம்பி இராசராசன் காலத்தவன் என்று திருமுறை கண்ட புராணமும் திருத்தொண்டர் புராண வரலாறும் கூறுதற்கு ஏற்பவே, நம்பியும், தம் காலத்தரசன் இராசராசனே என்பதை அவனது சிங்கள நாட்டு வெற்றியைக் குறிப்பிடுமுகத்தாற் புலப்படுத்தும் அருமைப்பாடு கண்டு உணரற்பாலது. எனவே நம்பி இராசராசன் காலத்தவரே கி.பி. 985-1014) எனக் கோடல் ஏற்புடையதே ஆகும். இராசராசனிடம் வந்த சிவனடியார் ஒவ்வொருவரும் ஒரு பதிகமே பாடினர் என்பது உண்மையே. என்னை? ஒருவர் அவர் ஊர்க்கோவிற் பதிகம் ஒன்றையே அறிந்திருந்தனர். ஆதலின் என்க. அக்காலம் திருமுறைகள் தொகுக்கப்பெறாத காலம். அப்பர், சம்பந்தர், சந்தரர் தம் பாடல் பெற்ற தலங்களில் இருந்து இராசராசன் அவைக்கு வந்தவர். தம் தலத்தில் அந் நாயன்மார் பாடிய ஒவ்வொரு பதிகமே வழிவழியாகக் கேட்டுப் பாடம் செய்திருத்தல் இயல்பே. அவர் மற்றொரு தலத்துப் பதிகங்களைப் பாட வழியில்லாதிருந்தது போலும் திருமுறைத் தொகுப்பு திருமுறைகள் தொகுத்தவர் நம்பியே 1. இராசராசன் நம்பியைக் கொண்டு திருமுறை வகுத்தான் என்ற மேற்சொன்ன இரண்டு புராணங்களும் குறிக்கின்றன. 2. இராசராசனுக்கு முற்பட்ட சோழர் காலங்களில் திருவல்லம், அல்லூர், திருப்பழுவூர், திருஎறும்பியூர், திருத்தவத்துறை, திருஆவடுதுறை போன்ற சில இடங்களிலேயே திருப்பதிகம் ஒதப்பெற்றது என்பது கல்வெட்டுக்களால் தெரிகின்றது. ஆயின் இராசஇராசற்குப் பின்னும் சேக்கிழார்க்கு முன்னும்