பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்து மூவர் காலம் 89 கோச்செங்கணான் மீது பாடப்பெற்ற களவழியின் காலம் ஏறத்தாழக் கி.பி. 450 - 500 என்ற இராவ்சாஹிப் திரு s. வையாபுரிப்பிள்ளை அவர்கள் கருத்தும்" நமது முடிபிற்கு அரண் செய்தல் இங்கு அறியத்தகும். நடுவுநிலையினின்றும் மேற்சொன்ன காரணங்கள் பலவற்றையும் ஆய்ந்து இம்முடிபு கொள்ளப்படின், இக்கோச் சோழனை அடுத்து, மேற்சொன்ன இடைக்காலத்தில் இருந்தவராகப் பெரிய புராணம் கூறும் புகழ்ச் சோழரை எடுத்துக் கொள்ளலாம். இவர் பெயர் சங்கநூல்களில் இல்லாததாலும் சிம்மவிஷ்ணுவுக்குப் பிறகு பல்லவர் காலத்தில் இத்தகைய சோழப் பேரரசர் இருக்க முடியாமையாலும், இந்த இடைக்காலமே இவர் வாழ்ந்த காலம் எனக் கோடல் பெரிதும் பொருத்தமே ஆகும்." அச்சுதன் போன்ற களப்பிரப் பேரரசனும், கோச்செங்கணான், புகழ்ச்சோழர் போன்ற சோழப் பேரரசரும் கி.பி. 5, 6ஆம் நூற்றாண்டுகளில் இருந்தமையாற் போலும் பல்லவர் சோழ நாட்டைக் கைப்பற்றக் கூடவில்லை கோச்செங்கணான், புகழ்ச்சோழர், களப்பிர அரசராகிய கூற்றுவ நாயனார்’ இவர்களை இவ்விடைப்பட்ட காலத்தவராகக் (சுமார் கி.பி. 450 - 500) கொள்ளின், தென் இந்திய வரலாற்றில் இருண்ட காலம் எனப்பட்ட காலத்தின் ஒரு பகுதி வெளிச்சமாயிற்றெனக் கொள்ளலாம். இவ்விருண்ட காலம் - பல்லவர் காஞ்சியைத் துறந்து தெலுங்கு நாட்டில் வாழ்ந்த காலம் - சோழர் இடையீட்டுக் காலமாக இருத்தல் வேண்டும் என்று வெங்கையா போன்ற கல்வெட்டறிஞர் கொண்ட கருத்தில்" ஓரளவு உண்மையுண்டு என்பதும் இதனால் உறுதிப்படும். இதுகாறும் செய்த ஆராய்ச்சியால், அப்பர்க்கு முற்பட்ட முற்சொன்ன பதின்மருள் கோச்செங்கணான் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகலாம் எனப்பட்டது. ஏனைய ஒன்பதின்மர் காலம் வரலாறு கொண்டு துணிய முடியாமையாலும், அவருட் சிலரேனும் சங்கத்திற்குப் பிறகும் கோச்சோழற்கு முன்னும் இருந்திருக்கலாம் ஆதலாலும் பொதுவாக அவ்வொன்பதின்மர் காலம் கி.பி. 5, 6 ஆம் நூற்றாண்டுகள் எனக் கோடலே பொருந்துவதாகும். அப்பர், சம்பந்தர்க்கு முற்பட்ட வரலாறு கண்ட நாயன்மார் 1. புகழ்ச் சோழர் இவர் முன்சொன்ன 5, 6ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவராவர் என்பது முன்பே கூறப்பட்டது. 2. புகழ்ச் சோழரது யானையைக் கொன்று, அவரால் மதிக்கப்பெற்ற எறிபத்த நாயனார்’ காலமும் முற்சொன்னதே ஆகும். - 3. கூற்றுவ நாயனார் . இவர் களப்பிரமன்னர் பல நாடுகளை வென்றவர். இவர் தமக்கு முடிசூட்டுமாறு தில்லைவாழ் அந்தணரை வேண்ட, அவர்கள், சோழர்க்கன்றிப் பிறருக்கு முடிசூட்டோம் எனக்கூறி மறுத்து அவரது