பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア6 பெரியபுராண ஆராய்ச்சி கோச்செங்கணான் கட்டிய மாடக் கோயில்கள் வேறாகும். இவை அனைத்தும் கோச்செங்கணான் போன்ற பேரரசால் கவனிக்கப்பட்டமையின், சிறந்த நிலையில் இருந்தனவாதல் வேண்டும். 2. பல்லவர் காலம் (கி.பி. 400 - 900) கோச்செங்கணான், புகழ்ச்சோழர் இவர்கட்குப் பிறகு அப்பர் சைவ சமயத்திற்குத் திரும்பி வரும்வரை சைவசமயம் ஓரளவு வளர்ச்சி பெற்றதாயினும், சமணத்தாற் பெரிதும் தாக்குண்டு வந்தது என்பது தண்டியார், நமிநந்தி இவர்தம் வரலாறுகளாலும், அப்பரே வைசத்திலிருந்து சமணத்திற்கு மாறிப் பல ஆண்டுகள் இருந்தார் என்பதாலும், நெடுமாறன் சமணனாக இருந்தான் என்பதாலும் நன்கு அறியலாம். எனினும், இந்நிலை பல்லவ நாட்டில் அப்பர் முயற்சியாலும், பாண்டிய நாட்டில் சம்பந்தர் முயற்சியாலும் மாறித் தமிழகம் சைவ நெறியில் தழைத்த காலமும் பல்லவர் காலமே ஆகும். ஆகவே, அக்காலத்துப் பல்லவ அரசராலும் பொது மக்களாலும் சிற்றரசராலும் சைவசமயம் எங்ங்னம் வளர்க்கப்பட்டது என்பதைக் காண்பது இன்றியமையாததாகும். 1. ஏறக்குறையக் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கந்த சிஷ்யன் என்ற பல்லவன் திருக்கழுக்குன்றம் சிவன் கோவிற்கு நிலதானம் செய்தான். 2. ஐயடிகள் காடவர்கோன் என்று கருதப்படும் மூன்றாம் சிம்மவர்மன்' சிவத்தல யாத்திரைசெய்து தலம் ஒன்றுக்கு ஒரு வெண்பா வீதம் பாடினார். அந்நூல் "க்ஷேத்திர வெண்பா" எனப்படும். இப்பொழுது அதன்கண் இருப்பவை 24 வெண்பாக்களே ஆகும்; எஞ்சியவை அழிந்து விட்டன. அச்சிதைந்த நூல் பதினோராந் திருமுறையிற் சேர்க்கப் பட்டுள்ளமை முன்பே கூறப்பட்ட செய்தியாகும். அந்நூலுட் குறிக்கப்பெற்ற சிவத்தலங்கள் பின்வருவனவாகும். அவை 1. தில்லை (2 குடந்தை, (3) ஐயாறு, (4) ஆரூர், 15 திருத்துருத்தி, குற்றாலம், தஞ்சைக் கோட்டம், 6 திருக்கோடிகா, 7 பாண்ட வாய்த்தென்இடைவாய்.” (8) திருநெடுங்களம், (9) குழித்தண்டலை, (10) ஆனைக்கா, (11 மயிலாப்பூர் (12 உஞ்சேனை மாகாளம் (13 வளைகுளம், (14) சாய்க்காடு, 15 திருப்பாச்சிலாச் சிராமம் (16) சிராமலை, (17) திருமழபாடி, (18) திரு ஆப்பாடி (19 காஞ்சிபுரம், 20 திருப்பனந்தாள், 21 ஒற்றியூர், (22) திருக்கடவூர், 23 திருக்கடவூர் மயானம் என்பன. 3. மகேந்திரவர்மன் (கி.பி. 615-650 இவன், தான் சைவன் ஆனதைத் திருச்சிக் குகை கோவில் கல்வெட்டால் வெளிப்படுத்தியுள்ளான் தன்னைக் "குணபரன்" என்பதையும் கல்வெட்டுகளால் புலப்படுத்திவிட்டான். இவன் சிவனுக்காகச் சீயமங்கலம், பல்லாவரம் வல்லம் தளவானுர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி என்னும் இடங்களில் கோவில்களைக் குடைந்துள்ளான்; மண்டபப்பட்டில் மும்மூர்த்தி கோவிலும் அமைத்தான். இவன் காஞ்சி