பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சிக்கு உரிய மூலங்கள் 9 திருப்பாதிரிப்புலியூரில் புகழ்பெற்ற சமண மடம் ஒன்று இருந்தது. நாட்டின் பல பகுதிகளில் சமண மடங்கள் இருந்து பாலி, வடமொழி, தமிழ் இம்மூன்றிலும் சமய நூல்களை வெளியிட்டன. சமணக் குரத்திமார் (பெண் துறவிகள் மடங்களைத் தாபித்துப் பெண் உலகிற்குத் தொண்டு செய்துவந்தனர். இங்ங்னமே பெளத்தமும் பரவி இருந்தது. எனினும் சமணமே மேனிலை உற்றிருந்தது. கி.பி. 7ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை சமணம் தமிழகத்தை ஆட்சி புரிந்ததென்று கூறல் தவறாகாது. பல்லவர், பாண்டியர் இந்தச் சமணத்தைப் பெரிதும் ஆதரித்து வந்தனர். அதன் பயனாகத் தமிழ் நாட்டுப் பழைய சமயங்களான சைவமும் வைணவமும் பேரளவு கவனிப்பார் அற்றுக் கிடந்தன. அந்தச் சமயத்தில் தோன்றியவர்தாம் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தருமாவர். கி.பி. 7ஆம் நூற்றாண்டின் பிற்பாதி முதல் சைவமும் வைணவமுமே நாடெங்கும் வளர்ச்சி பெறலாயின. இங்ங்னம் உண்டான சமய மறுமலர்ச்சியைத் திருமுறைகள், ஆழ்வார்களின் அருட்பாடல்கள் இவற்றைக் கொண்டும் அக்காலத்துப் பல்லவர், பாண்டியர் பட்டயங்கள், கல்வெட்டுகள், கோவில்கள், வடமொழி நூல்கள், அயல்நாட்டார் குறிப்புகள் இவற்றைக் கொண்டும் நன்குணரலாம். சைவ மறுமலர்ச்சியில் தலைவர்களாக இருந்தவர் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தருமே யாவர். அவர்கள் காலத்து நாயன்மார்களும், பல்லவ, சோழ, பாண்டிய அரசர்களும் அவர்கட்கு உறுதுணையாக இருந்தனர். அவர்கட்குப் பிறகு பற்பல நாயன்மார் சைவத்தை வளர்த்தனர். இறுதியில் சுந்தரர், அவர் காலத்து நாயன்மார், பல்லவ, சோழ, பாண்டிய மன்னர் முதலியோர் சைவத்தை வளர்த்து மறைந்தனர். இதுகாறும் கூறியவாறு, பல்லவர் காலத் தென்னாட்டு வரலாற்றை மேற்சொன்ன இலக்கியம், பட்டயம், கல்வெட்டு, கோவில்கள், அயலார் குறிப்புக்கள், நாணயங்கள் முதலிய சான்றுகளைக் கொண்டு நன்கு தெளிந்த பிறகு, திருமுறைகளைப் படிப்பின், நாயன்மார் வரலாற்றுக் குறிப்புக்களைப் பாதியளவு அறியலாம். சுந்தரர்க்கும் நம்பிக்கும் பிற்பட்ட காலம் ஏறக்குறையக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவப் பெருநாடு சோழர் கைக்கு மாறிவிட்டது. சோழர் வழிவழிச் சைவர் ஆதலால், அவர்கள் நாயன்மாரால் சிறப்பிக்கப்பெற்ற கோவில்கள், என்றும் அழியாமல் இருக்கவேண்டும் என்று கற்கோவில்களாக மாற்றினர்; மானியங்களைத் தாராளமாகவிட்டுப் பூசை விழா முதலியவை நன்கு நடைபெற ஏற்பாடு செய்தனர்; திருமுறைகளைத் தொகுத்தனர்; நாயன்மார் அறுபத்துமூவர் சிலைகளையும் கோவில்களில் எழுந்தருளச் செய்தனர். அவற்றுக்குப் பூசை விழா முதலியன நடைபெறத் தக்க ஏற்பாடுகள் செய்தனர்; அக்கால மக்கள் நாயன்மார் பெயர்களைத் தம் பிள்ளைகட்கு இட்டு மகிழ்ந்தனர். நாயன்மார்