உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு 171

விட்டு நெற்பயிர்களின் நாற்றுக்களை நடுபவர்களினுடைய கூட்டமே குற்றம் சிறிதும் இல்லாத காவிரி ஆறு பாயும் சோழநாட்டில் விளங்கிப் பரவிய ஊர்கள் எல்லாவற்றிலும் காணப்படும். பாடல் வருமாறு:

“உழுத சால்மிக ஊறித் தெளிந்தசே

றிழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது காறு கடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்.” உழுத-வல்களில் உழவர்கள் உழவைச் செய்த சால்சால்கள்; ஒருமை பன்மை மயக்கம், சால்-ஏர் சென்ற வழி: மிக-நன்றாக ஊறித் தெளிந்த-ஊறித் தெளிவை அடைந்த சேறு-சேற்றினுடைய. இழுது-குழம்பு. செய்யினுள்-வயல்களில்; ஒருமை பன்மை மயக்கம். இந்திரத் தெய்வதம்-மருதநிலத்துக்கு உரிய இந்திரனாகிய தெய்வத்தை. தொழுது-வணங்கிவிட்டு, நாறு-நெற்பயிர் களின் நாற்றுக்களை; ஒருமை பன்மை மயக்கம். நடுவார்நடும் பள்ளிகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். தொகுதியே-கூட்டமே. பழுது-ஒரு குற்றமும் இல்இல்லாத கடைக்குறை. காவிரி-காவிரி ஆறு பாயும். நாட்டின்-சோழநாட்டில். பரப்பு-விளங்கிப் பரவிய வளர் கள்: ஒருமை பன்மை மயக்கம். எலாம்-எல்லாவற்றிலும் காணப்படும்; இடைக்குறை. இந்திரன் மருத நிலத்துக்கு உரிய தெய்வம்; வேந்தன் மேய திம்புனல் உலகமும்,’’ (தொல்காப்பியம், அகத்திணை இயல், 5) என வருவதைக் காண்க. . - - அடுத்து வரும் 13-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

‘மிகுதியாகப் பாய்ந்த காவிரி ஆற்றின் நீர் பரவிய வயல் களில் நெற்பயிர்களாகிய முதல்களின் சுருள்கள் விரிவை அடைய அதைப் பார்த்து உழவர்கள் பக்குவத்தைக் காண்