உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 231.

அஞ்சணை வேலி ஆரூர் ஆதரித் திடங்கொண் டாரே...' என்று தேவாரத்தில் வருவதைக் காண்க. -

ஆடகேசுவரம் என்ற தனிக்கோயில் இந்த ஆலயத்துக் குள் உள்ளது. பிலம் புற்றிடம் கொண்டாருடைய திருக் கோயிலுக்குத் தென் கிழக்கில் இருக்கிறது. அதற்கு நாக பில்ம் என்று பெயர். அதைக் கல்வினால் மூடியிருக்கிறார் கள். அந்தப் பிலத்தில் எழுந்தருளியுள்ள ஆடகேசுவரரைத் தரிசனம் செய்து யாவரும் சுவர்க்க பதவியை அடைந்தமை யால் சுவர்க்க லோகத்தில் இடம் இல்லாமற் போனதை அறிந்த இந்திரன் அரதன சிருங்கம் என்னும் மலையினால் அந்தப் பிலத்தை மூடி அடைத்து விட்டான் என்று ஒரு வரலாறு வழங்குகிறது. இந்தச் செய்தியைத் திருவாரூர்ப் புராணத்தால் உணரலாம். இந்த ஊரில் கமலாம்பாளுடைய சந்நிதி தனியாக அமைந்துள்ளது. நீலோற்பலாம்பாள், அல்லியங்கோதை என்ற திருநாமங்களைக் கொண்ட அம்பி கையின் சந்நிதி தனியாக இருக்கிறது. மேற்குக் கோபுரத் துக்கு எதிரில் மாற்றுரைத்த பிள்ளையார் திருக்கோயில் என்ற ஒர் ஆலயம் இருக்கிறது. தெற்குக் கோபுரத்திற்கு அருகில் பரவை நாச்சியார் திருக்கோயில் உள்ளது. மனுச் சோழ மன்னனுடைய புதல்வன் தேரில் ஏறிச் சென்றதும், ஒரு பசுவின் கன்று தேர்க்காலில் சிக்கி இறந்ததும், தன்னு டைய புதல்வன்மேல் மனுச்சோழன் தன் தேரை விட்டதும் ஆகிய ஐதிஹ்யங்களை புலப்படுத்துவதற்காகக் கல்லினால் தேர் முதலியவை செய்யப் பெற்றுள்ளன. இவை கிழக்குக் கோபுரத்துக்கு அருகில் உள்ளன. கமலாலயம் என்னும் பெரிய திருக்குளத்தின் நடுவில் ஒரு சிறு கோயில் விளங்கு கிறது. திரு ஆரூரைப்பற்றிக் குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, காந்தாரம், நட்டராகம், கெளசிகம் என்ற பண்களில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருப்பதிகங்களைப் பாடியருளியிருக்கிறார். அவற்றுள் வியாழக் குறிஞ்சிப் பண் அமைந்த பாசுரம் ஒன்று வருமாறு: -