பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.#4 பெரிய புராண விளக்கம்

அத்தகைய சைவவேளாளர் குலத்தில் சேக்கிழார் என்பவருடைய பரம்பரையில் அருள்மொழித்தேவர் திருஅவதாரம் செய்தருளினார். அந்தக் காலத்தில் சோழ நாட்டை ஆட்சி புரிந்து வந்த அபயகுலசேகரன் என்னும் சோழமன்னன் அருள்மொழித் தேவருடைய கல்வி அறிவு பக்தி நல்லொழுக்கம் முதலியவற்றைத் தெரிந்து கொண்டு அவரை அழைத்துவரச்செய்து தன்னுடைய முதல் அமைச்சராக நியமித்தான். அவருக்கு உத்தமச்சோழப் பல்லவன் என்ற உயர்ந்த பட்டத்தை வழங்கினான். அந்த அருள்மொழித் தேவர் சோழ நாட்டில் விளங்கும் சிவத்தளமாகிய திருநாகேச்சுரத்தில் மிக்க பக்தி உடைய வராகி அங்கே கோயில் கொண்டு விளங்கும் நாகேசுவரரை அடிக்கடி அந்தத் தலத்துக்கு எழுந்தருளி வணங்கிவிட்டு வருவது வழக்கம். - . -

தாம் பிறந்த ஊராகிய குன்றத்துாரில் மடவளாகத்தை உண்டாக்கி ஒரு திருக்கோயிலையும் கட்டுவித்து அந்த ஆலயத்துக்குத் திருநாகேச்சுரம் என்ற திருநாமத்தை வைத்து அந்த ஆலயத்திற்கு வேண்டிய பாத்திரங்கள் முதலியவற்றை வழங்கி ஒவ்வொரு நாளும் பூசை முறைப் :படி நடக்கும் வண்ணம் வேண்டிய பொருளையும் வழங்

கினார். -

அந்தக் காலத்தில் சமணர்களில் ஒருவராகிய திருத்தச்ச தேவர் இயற்றிய பெருங்காப்பியமாகிய சீவக சிந்தாமணியைக் கற்று அந்த நூலின் சொற்சுவை பொருட்சுவைகளில் சில புலவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். சோழ மன்னனும் அந்தச் சீவகசிந்தாமணியைப் புலவர்கள் படித்துச் சொல்லக் கேட்டு அந்தப் பெருங்காப்பி யத்தில் ஈடுபாடு உ ைட ய வ ன் ஆனான். அதை அறிந்த அருள்மொழித் தேவர், 'இது சமணர்கள் பொய் களைக் கட்டிப் பாடிய நூல். இந்த நூல் மறுமைக்கு உதவாது; இம்மைக்கும் உதவாது. ஆனால் சிவ