பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L 2 பெரிய புராண விளக்கம்

.கள் நீண்ட இசைப்பாடல்களைப் பாடிக்கொண்டே கூத்தா டினார்கள்; இந்தப் பூமண்டலத்தில் வாழும் பெண்மணிகள் அஞ்சலிகளைத் தங்களுடைய தலைகளின்மேல் தங்கள் கைகளை வைத்துப் புரிந்தார்கள்;பக்தர்கள் நடராஜப்பெரு மான் புரிந்தருளும் ஆனந்தத்தாண்டவத்தைத் தரிசித்தார் கள். சங்கவாத்தியத்தோடு பேரிகை முழங்கும் கானம். வீணையின் நாதம், ஒப்பற்றகைத்தாளத்தைத் தட்டும் ஒசை, புல்லாங் குழலை வாசிக்கும் இனிய ஒலி, எக்காளத்தின் முழக்கம், இடக்கை என்னும் இசைக் கருவியின் நாதம், மாணிக்கத்தைப் ப தி த் த கா களத்தின் கானம், பம்பையைக் கொட்டும் ஒசை, வலம்புரிச் சங்கை ஊதும் துழனி, மணியை அடிக்கும் ஓசை முதலிய மங்கல வாத்தியங்களின் ஒலி எல்லா இடங்களிலும் முழங்கின. அதல்ை ஒரு புதிய அழகு உண்டாயிற்று,

மறையவர்கள் புரியும் யாகத் தீயில் எழும் நீண்ட புகை, ஆலயங்கள் உள்ள இடங்கள் எல்லாவற்றிலும் குங்குவியத்தைப் புகைக்கும் புகை, நெடுங்காலமாக உள்ள கரும்புச் சாற்றைச் காய்ச்சும் ஆலைகளில் எழும் ஒளியோடு கூடிய புகை, தோரணங்களைக் கட்டியிருக்கும் ஒவ்வொரு தெருவிலும் அழகையுடைய பெண்மணிகள் தங்களுடைய கூந்தல்களை உலர்த்துவதற்காகப் புகைக்கும் அகிற்கட்டைகளின் புகை ஆகியவை எல்லா இடங்களிலும் அழகு உண்டாகும் வண்ணம் பரவின.

பெண்மணிகள் நடனமாடும் சாலை, நடிப்பவர்கள் நாடகம் நடிக்கும் சாலை, முத்துக்களைத் தொங்கவிட்ட ஆஸ்தான மண்டபம், மேடையை உடைய நாடக அரங்கம், அழுக்கு இல்லாத வெட்ட வெளியில் உள்ள கூடம், மாடம், மதில், மாளிகை, மேல்மாடி ஆகிய இடங்கள் எங்கும் இதழ்கள் மலர்ந்த மலர்களைக் கட்டிய மாலைகளையும். பொன்னரி மாலைகளையும் சிதம்பரத்தில் வாழும் தொண்டர்கள் தொங்க விட்டார்கள். - - - - - - ‘. . . . . . . . . . . . . . . . . . .