உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பெரிய புராண விளக்கம்

பிறகு உள்ள 11-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு : *தங்களுடைய நெற்றிகளில் ஒற்றைக் கண்களை உடையவர்களும், நான்கு பெரிய தோள்களைப் பெற்ற வர்களும், விபூதியைப் பூசிக்கொண்ட திருமேனிகளைக் கொண்டவர்களும் ஆகிய பலருக்கும். இடப வாகனத் தின்மேல் ஏறியருளிய கைலாசபதியாருடைய அடியவர் களுக்கும், பின்னிய சடாபாரத்தைத் தம்முடைய தலை யிற் கொண்ட கைலாசபதியினுடைய திருவருளைப் பெறும்பொருட்டு வந்தவர்களுக்கும், ஏனையவர்கள் யாவருக்கும் தலைமைப் பதவியை வகிக்கும் வேலை யும், தம்முடைய செந்தாமரை மலர்களைப் போன்ற கரங்களில் உடைவாளும், பிரம்பும், கற்றையாக நீண்ட சடாபாரத்தையுடைய தலையும் மேற் பெற்ற கைலாசபதி வழங்கிய திருவருளினால் பெற்று விளங்குகிறவனுமாகிய நந்தியெம் பெருமான் காவல் புரிவது அந்தக் கயிலாயம் என்று பெருமையைப் பெற்ற மலை. பாடல் வருமாறு: -- - - * நெற்றியிற் கண்ணர் காற்பெருக் தோளர் - நீறணி மேனியர் அனேகர் -

பெற்றமேற் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன் தன்னருள் பெறுவார் மற்றவர்க் கெல்லாம் தலைமையாம் பணியும்

மலர்க்கையில் சுரிகையும் பிரம்பும் கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான்

காப்பதக் கயிலைமால் வரைதான். ' நெற்றியில்-தங்களுடைய நெற்றிகளில்; ஒருமை பன்மை மயக்கம். கண்ணர்-ஒற்றைக் கண்களைப் பெற் றவர்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். நால்-நான்கு. பெரும்-பெரிய, தோளர்-தோள்களைக் கொண்டவர்க ளுக்கும். ஒருமை பன்மை மயக்கம். நீறு-விபூதியை. அணி-யூசிக்கொண்ட மேனியர்-திருமேனிகளைப் பெற்.