பக்கம்:பெருங்கதை ஆராய்ச்சி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

தடவினான். தன் தோளை அவள் மார்பிற் சாத்தி, "நன்னு தல் மடவோய்! நாள் பலவாக என்னைக் காணாது எவ்வாறு ஆற்றியிருந்தனையோ? என்று கேட்டு, அவள் உடலைத் தீண்டி அறிந்தான். ஆயினும் தான் காணுவது கன வென்ற நினைவால் நனவை அறியாது கண்மூடிக் கிடந் தான்.வாசவதத்தை மறுமொழி எதுவும் கொடாதவளாய்க் குனிந்து அவனையே பார்த்த வண்ணம் வாளா இருந்தாள். உறங்கியவன் புரண்டு நகர்ந்து, "நங்காய்! மலைச் சாரற் பூஞ்சோலையில் நாம் உண்டாடி அரண்மனை திரும்பிய பின் ஒரு நாள் அப்பூஞ்சோலைத் தளிர்களும் பூக்களும் வேண்டு மென்று கேட்டாய். அவற்றைக் கொண்டு வரக் குதிரை யேறிச் சென்ற நான் திரும்புவதற்குள் தீவாய்ப்பட்டு உயிரை விட்டாய்! இப்பொழுதோ அணிகலன் எதுவு மின்றி நான் அறிய இயலாதபடி மெலிவுற்றுத் தோன்று கிறாய். நெருப்பில் வெந்து மடிந்தோருடைய உருவம் இப் படித்தான் இருக்குமோ?" என்று அவள் தீண்டிய வண்ணமே துயிலத் தொடங்கினான். வாசவதத்தையைப் பிரித்துச் சென்றனர். புரண்டு,"நங்காய்! என் வினா பிற்கு ஏதும் மறுமொழி தர வில்லையே என்று கூறிக்கொண்டே தழுவச் சென்றவன், அவளைக் காணாமல் துயில் மயக்கம் தெளியப்பெற்றுப் பெரிதும் வருந்திப் புலம்பினான்.

மெய்யைத் நண்பர்கள் உதயணன் மேலெல்லாம் தடவி வாசவதத்தை நேரில் வருகிறாள். உதயணனும் அவளை அணைத்து மகிழ்கிறான். ஆயினும் அது நனவு 'என்பதை உணராதவனாய்க் கன வாகவே கருதித் தூக்க மயக்கத்திலேயே இருக்கிறான். தன் முன்னே இருப்பவள் உயிருடனுள்ள வாசவதத்தை தான் என்பதை உணர்ந்தானில்லை. நனவைக் கனவாக மயங்க வைத்துப் படைக்கப்பட்டுள்ள இந்த இடம்3 காட்சி

யமைப்பிலேயே தனிச் சிறப்புடையதாய்த் திகழ்கிறது.


30. பெருங். 4:7: 1-93