பக்கம்:பொங்கற்பரிசு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இல்லை! இல்லை! இல்லை!


கீழ்த்திசையில் தொடுவானில்

மையிருட்டை வெய்யோன்
கிழித்துவந்த தைக்கண்டோம் ;
புத்தாண்டைக் கண்டோம் !
தாழ்ந்திருக்கும் புதரெலாம்
இணைந்திருக்குஞ் சிட்டு:
தரையெல்லாம் பூவிரிப்பு ;
மரமெங்கும் பாட்டாம்!
சூழ்ந்திருந்த பகையெல்லாம்
தொலைந்ததுவாம் இன்றே !
தோப்பெல்லாம் பழக்குலைகள் ;
வயலெல்லாம் செந்நெல்!
தாழ்வில்லை ; பசியில்லை ;
பகைக்கொடுமை இல்லே!
தமிழ்ப்பரிதி தலைநிமிர்த்தான் ;

வாழியவே பொங்கல்!

1




ஒளிப்பரப்பிச் செங்கதிரோன்

தங்கத்தாம் பாளம்
உயிர்த்தெழுந்தான்; ஊனுடவில்
உயர்ந்ததுவே இன்பம் !
வெளியெலாம் பசுங்காடு;
வேலியெலாம் காய்கள் :
பூப்பூத்த மென்கரும்பு

நீர்நிலைபோல் தோன்றும் ;



46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/54&oldid=1146495" இலிருந்து மீள்விக்கப்பட்டது