பக்கம்:பொங்கற்பரிசு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொற்கதிர் வாழ்க!
தூற்றல் மழையைக் குளிரைப்

பனியைத் தொடர்ந்து வந்த
காற்றாகும் வாடையைப் பகையை
நொறுக்கிக் கருங்கடல்மேல்
மாற்றார்க் கொளியைத் தருமெங்கள்
அண்ணாவின் வாயுரைபோல்
போற்ற எழுந்தது கீழ்க்கடல்

பொற்கதிர் வாழியவே!

1


செங்நெல் விளைத்துத் திருந்திய

புன்செய் வெளியிலெங்கும்
கன்னல் விளைத்துக் கனிமலர்
சிந்தித் திராவிடத்தின்
இன்னல் களைந்து கீழ்க்கடல்
போற்கதிர்; எங்களண்ணா
சொன்னயம் போல வளப்பம்

மிகுந்தின்று தோன்றியதே!

2


செய்யின் விளைவைப் பசுங்காச்

சிரிப்பை அழைத்துவந்த
தையின் முதல்நாள் திராவிடர்
பொன்னாள்; தனித்திருநாள்!
வையத் திருளே யகற்றும்
அறிஞர்அண் ணாத்துரைபோல்
மையைக் கிழித்தது கீழ்க்கடல்

பொற்கதிர் வாழியவே !

3

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/57&oldid=1147457" இலிருந்து மீள்விக்கப்பட்டது