பக்கம்:பொன் விலங்கு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 131

கோபம் அம்மாவிடம் அதிகமாக உண்டு என்பது மோகினிக்குத் தெரியும். தான் கண்ணாயிரத்தின் வீட்டுக்குள் வரவில்லை' என்பதுதான் அம்மாவின் இந்தக் கோபத்துக்குக் காரணம்'என்றும் மோகினி புரிந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் கார் வெளி வீதியிலிருந்த பிரபலமான பெரிய ஸ்டுடியோ ஒன்றின் வாயிலில் போய் நின்றது. கண்ணாயிரம் தன்னோடு அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு ஸ்டுடியோவுக்கு உள்ளே சென்றார். சுற்றிலும் மலைப் பின்னணியோடு மயில் ஒன்று தோகை விரித்தாடுகிற nன் கட்டிவிட்டு எதிரே காமிராவை நிறுத்தி மோகினியைப் புகைப்படம் எடுக்க ஏற்பாடு ஆகியிருந்தது. பெரிய அழகிய தோகையை விரித்துக்கொண்டு நிற்கும் மயில்போல் கட்டுக்கடங்காத கருங்குழல் அலை அலையாக அவிழ்ந்து தொங்கிட, கூந்தலும் முகமும் சேர்த்து படத்தில் விழுகிறாற்போல் காமிராவுக்கெதிரேஅமர்ந்தாள்மோகினி. கண்ணாயிரம் ஏதோ சொல்ல அவள் அருகில் வந்தார். பதுங்கிப் பதுங்கி அவர் அருகில் வந்த விதத்திலேயே வியாபாரத் தந்திரம் தெரிந்தது. ஆனாலும் பயந்து கொண்டேதான் வந்தார்.

"இதோ ஒரு நிமிஷம் படம் பிடிக்கிறதுக்கு முன்னாடி இந்தச் சேலையைக் கட்டிக்கிடணும். அப்பத்தான் எடுப்பாக இருக்கும்" என்று கரைகளில் பளபளவென்ற தங்கச் சரிகையிட்டு மஸ்லினை விட மிக இலேசாக இருக்கும் புடவை ஒன்றைப் பிரித்து மோகினியிடம் நீட்டினார் கண்ணாயிரம்.

'கண்ணாயிரம் சார் எனக்கு ஒரு சந்தேகம் உங்கள் மயில் தோகை மார்க் கூந்தல் தைலத்தைப் பெண்கள் தலைக்குத் தடவிக் கொள்வதற்காக விற்கப் போகிறீர்களா? அல்லது புடவைக்குத் தடவிக் கொள்வதற்காக விற்கப் போகிறீர்களா? முதலில் அதைச் சொல்லிவிடுங்கள். அப்புறம் நீங்கள் என்னைப் போட்டோ பிடிக்கலாம்' என்று ஆணியடித்தாற்போல் அழுத்தமாக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அந்த வெங்காயச் சருகுச் சேலையை அவர் கையிலிருந்து வலிந்து பறித்து ஒரு மூலையில் ஆத்திரத்தோடு வீசி எறிந்தாள் மோகினி, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/133&oldid=595065" இலிருந்து மீள்விக்கப்பட்டது