உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பொன் விலங்கு

நேரத்திலேயே என்மேல் பொறாமை ஏற்பட்டுவிட்டது அந்த மனிதருக்கு. நான் மாணவர்களைக் கவர்ந்து என் வசப்படுத்திக் கொண்டு விடுவேனோ என்று அவருக்குப் பயமாயிருக்கிறது. பிறருடைய தகுதிக்குறைவைக் குறித்து வருந்துகிறவர்களோடு சேர்ந்து நாமும் வருந்தலாம். பிறருடைய தகுதியைக் கண்டே வருந்தினால் அவர்களைப் பார்த்து நாம் என்ன செய்ய முடியும்?"

“என்ன செய்ய முடியுமாவது நன்றாக வாய் விட்டுச் சிரிக்க முடியும் அப்படிப்பட்டவர்களைப் பார்த்துநீஏன் கவலைப்படுகிறாய் சத்யம்? பிறருடைய பொறாமையை இப்படி மதிப்பிடத் தெரிந்து கொள்ளேன். உன்னிடம் ஏதோ ஒரு சாமர்த்தியம் - அவர்கள் பொறாமைப்படத்தக்க சாமர்த்தியம் இருப்பதால்தானே பொறாமைப் படுகிறார்கள்? உன் சாமர்த்தியத்தைப் பாராட்டுகிறவர்கள் உன்னை ஒப்புக்கொண்டுவிடுகிறார்கள், பாராட்டமுடியாதவர்கள் பொறாமைப் படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? நான் சொல்வதை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள். பிறர் வழி உண்டாக்கியபின் நடப்பதா அல்லது நாம் நடப்பதாலேயே ஒரு புதுவழியை உண்டாக்குவதா? என்பதுதான் பிரச்சினை. உன்னையும் என்னையும் போலத் துணிந்த கட்டைகள் பிறர் உண்டாக்கிய வழியில் நடப்பதைவிட நாமே நடந்து வழி உண்டாக்குவதைத்தான் விரும்புவோம். அப்படி வழி உண்டாக்க விரும்புகிறவர்களுக்கு மற்றவர்கள் தொல்லையளிப்பது இயல்புதான். மோகினியின் நிலைமையும் அதுதான் அவளைப் போன்றவர்கள் எந்த வழியில் போக வேண்டும் என்று அவளுடைய தாயும், கண்ணாயிரம், மஞ்சள்பட்டியோ - மரகதப்பட்டியோ - அந்த ஜமீன்தாரும் எதிர் பார்க்கிறார்களோ அந்த வழியை வெறுத்து அவள் புது வழியில் வர ஆசைப்படுவதால்தான் துன்பப்படுகிறாள். ஆனால் இத்தகைய துன்பங்கள்தான் மனிதனைப் புடம்போட்டு எடுக்கும் புனித அநுபவங்கள். இவற்றைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். நேருக்கு நேர் நின்று சமாளிக்கத் தெரிய வேண்டும் நமக்கு

'எதிர்கொள்வதற்குப் பயந்தோ, தயங்கியோ, இவற்றை உன்னிடம் சொல்லவில்லை, குமரப்பன்? நீ சொல்வாயே, மனிதர்களில் சிலரும் எல்' போர்டாவது ஆன் டெஸ்ட்' போர்டாவது மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதாக - அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/182&oldid=595172" இலிருந்து மீள்விக்கப்பட்டது