உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 பொன் விலங்கு

"இப்பிடி"யாருக்கு வந்த விருந்தோன்னு இருந்திட்டாநாளைப் பின்னே இந்த வீட்டைத் தேடி மனிசாள் யாரும் வரமாட்டாங்க. தொழில் பட்டுப்போய் நீயும் நானும் தெருவிலே பிச்சைக்கு நிற்கலாம்.டீ...'

'மானங்கெட்டுப்போய் வீட்டுக்குள்ளே நிற்கிறதைவிட மானத்தோடு தெருவில் நிற்கலாம்..."

இந்த வார்த்தைகளை இவ்வளவு துணிவாக அம்மாவிடம் வெடுக்கென்று நேருக்கு நேர் அவள் சொல்லியிருக்கலாமோ, கூடாதோ? ஆனால் சொல்லியாயிற்று. அம்மா பரபரப்பாக வந்த விதம், 'பெரிய மனிசாள் வந்திருக்காங்க என்று சொல்லிய விதம், எல்லாமே அவள் மனத்தில் வெறுப்பை ஊட்டின. அந்த வெறுப்பின் விளைவாகத்தான் அவள் இப்படிப் பேசியிருந்தாள். செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து செல்வமும் செல்வாக்கும் உள்ளவரான பெரிய வணிகர் ஒருவரை அழைத்துக்கொண்டு வந்திருந்தார் கண்ணாயிரம். அந்தத் தன வணிகர் வீட்டில் கலியாணமாம். கலியாணத்தன்று மாலை வரவேற்பின்போது மோகினியின் நாட்டியம் இருந்தால் நல்லதாம். கண்ணாயிரம் அந்தத் தன வணிகரை அழைத்துக்கொண்டு வந்தது. அறிமுகப்படுத்தியது, பேசியது எல்லாமே, 'நான் ஏற்பாடு செய்கிறேன், 'நான்தான் இதெல்லாம் ஏற்பாடு செய்ய முடியும் என்ற திமிர் தெரியும்படி இருந்தன. கண்ணாயிரத்தைப் போல் எந்தத் தகுதியினாலும் கர்வப்பட வழி இல்லாதவர்கள் எதற்காகவோ கர்வப்பட்டுக் கொள்வதை அவள் மனம் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெறுத்தது; கர்வப் படுவதற்கும் தலைநிமிர்ந்து நடப்பதற்கும் ஏதோ ஒரு சிறப்பான காரணம் உள்ளவர்கள் கர்வப்படுவதையே இந்த உலகம் ஏற்றுக் கொள்வதற்கும், அங்கீகரிப்பதற்கும் தயங்குகிறது. அப்படியிருந்தும் கண்ணாயிரத்தைப் போன்றவர்கள் தங்களைத் தாங்களே கர்வப்படுவதற்குரியவர்களாகப் பாவித்துக் கொண்டு திரிவதைச் சமூகமும் பெரிய மனிதர்களும் எப்படி மன்னிக்கிறார்கள்? என்று புரிந்துகொள்ள முடியாமல் மனம் கொதித்தாள் அவள். அந்தக் கொதிப்பினால்தான் அம்மாவுக்குப்பதில் சொல்லும்போது அவ்வளவு கடுமையான வார்தைகளாகச் சொல்லிவிட்டாள். அவளுடைய பதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/272&oldid=595373" இலிருந்து மீள்விக்கப்பட்டது