பக்கம்:பொன் விலங்கு.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 பொன் விலங்கு

போல் தடையில்லாமல் நடந்து கொண்டிருந்தான் அவன். மற்றவர்களுடைய சூழ்ச்சியையும், வஞ்சகத்தையும் பொய் புனை சுருட்டுகளையும் புரிந்து கொள்கிறபோது அவனுக்கும் கூட மேலே நடக்கத் தோன்றாமல் மெலிந்து நலிந்து சில கணங்கள் தயங்கி நிற்கத் தோன்றும். அப்படி நலிந்து மனம் வருந்தும் வேளைகளில் நவநீத கவியின் அற்புதமான கவிதை ஒன்றை நினைவு கூர்வது அவன் வழக்கம். பக்குவமான நல்ல மனிதனுடைய சராசரி உள்மனத்தின் அந்தரங்கமான ஏக்கங்களும், தாபங்களும், தாகங்களும் சுயமாக ஒலிக்கிற நல்ல கவிதைகளை அந்தத் தலைமுறையில் நவநீத கவி ஏராளமாகப் பாடியிருந்தார். அவற்றில் சத்தியமூர்த்தி அடிக்கடி நினைவு கொள்கிற கவிதை இது:

இதழ் மலர்ப் பொழிலில் எண்ணங்கள் மலர்ந்திருக்க எண்ண மலர்க் குவையில் ஏடெழுதும் கவியிருக்கக் கண்ணும் மனமும் பசித்திருக்கக் கண்டவுலகில் பொய்யிருக்க எண்ணுமெழுத்தும் சலித்திருக்க ஏதோ நலிந்திருந்தேன் என்னுள் மெலிந்திருந்தேன்....... சொல்லிப் புரியவைக்க முடியாத நுணுக்கமான வேதனைகளின் போதெல்லாம் சத்தியமூர்த்திக்கு இந்தப் பாட்டு நினைவில் தோன்றியிருக்கிறது. 'கண்ணும் மனமும் பசித்திருக்கக் கண்டவுலகில் பொய்யிருக்க' என்ற வரிகளை வாய்க்குள்ளேயே முனகிப் பார்த்துக் கொண்டாலும்-அப்படித் திரும்பத் திரும்ப முனகுவதில்கூட இதுதான் உண்மை' என்று உண்மையை ஞாபகப்படுத்திக் கொள்கிற ஒரு சுகம் இருந்தது. நல்ல கவிதையை இரசிக்கிற சுகத்திலிருந்தும் கூட ஒருவன் தைரியசாலியாகவும், இலட்சியவாதியாகவும் இருக்க முடியும். சில கவிகளுடைய பாடல்கள் தலைமுறை தலை முறைகளாகப் பெருகி வாழ்கிற ஒரு வீரப் பரம்பரையையே படைத்துக் காத்திருக்கிறது. அதைப்போல் ஓர் இலட்சியவாதியின் மனத்துக்கு ஆறுதல் தருகிற உட்குரல் இந்தப் பாடலில் இருப்பதை உணர்ந்திருக்கிறான் அவன். இந்தச் சில நாட்களில் அவனுடைய வாழ்வில் எத்தனை எத்தனையோ புதிய சம்பவங்களும் புதிய அநுபவங்களும் நேர்ந்திருந்தன. பொறாமையால் வருகிற புகழையும் புகழால் வருகிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/292&oldid=595417" இலிருந்து மீள்விக்கப்பட்டது