பக்கம்:பொன் விலங்கு.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O2 பொன் விலங்கு

எதற்காக ஏற்பட்டிருந்ததென்று நினைத்தபோதும் அதன் காரணம் இப்போது அவனுக்குப் புரியாததாக இருந்தது. ஏதோ அந்த வேளையில் அப்படித்தான் செய்துவிட வேண்டுமென்று தோன்றியது, செய்து விட்டோம் - என்ற ஞாபகம் மட்டும் நினைக்க மீதமிருந்ததே தவிரக் காரணம் மீதமில்லை.

உறக்கம் வராத காரணத்தினால் அறைக்கு வெளிப்புறம் மாடி வராந்தாவில் உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. பேச்சுத் துணைக்குத் தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனும் ஊரில் இல்லை. பின் பக்கத்தில் சண்பக மரத்துக் கிளைகளும் இலைகளும் காற்றோடு பேசிக் கொண்டிருந்தன. முன் பக்கம் பாதரசம் வழிந்து நிறைந்து பரந்தாற்போல் ஏரியும், வெண் நீல மின் விளக்குகளுக்கும் அப்பால் இருளோடு இருளாக இனந் தெரியாமற் கலந்து போய்விட்ட மரக் கூட்டங்களும், மலைகளும், லேக் அவென்யூவும் அமைதியாகத் தெரிந்தன. நீண்டு பரந்த சோக இருளில் அங்கங்கே மின்னி மறையும் சின்னஞ் சிறு மகிழ்ச்சி மின்னல்களைப் போல் எங்கோ சில பகுதிகளிலிருந்து வானொலி இசைக் காற்றில் முறிந்து முறிந்து வந்து ஒலித்துக் கொண்டிருந்தது. எதிர்ப்புறம் ஏரியின் மறுகரையில் 'நியான்லைன் நீலக்குழல் விளக்குகளில் எழுதப்பட்டிருந்த லேக் வியூ ஹோட்டல் என்ற ஒளி எழுத்துக்கள் அணைந்து அணைந்து எரிவதன் மூலம் பெயரும் மின்னி மின்னி மறையக் கூடிய இயல்புடைய ஒன்றுதான் என்பதை நாகரிகமாக நிரூபித்துக் கொண்டிருந்தது. தன் மனத்தில் இடைவிடாத இன்பக் கனவாக நிறைந்திருந்த மல்லிகைப் பந்தல் என்னும் அந்த ஊருக்கே தான் வந்து வசிக்கத் தொடங்கி வாரங்கள் சில ஓடி விட்டதையும் தன் மனம் விரும்பி வேலை பார்க்க வந்த அந்த ஊர் கலைக் கல்லூரியின் சுக துக்க அநுபவங்களும் புகழ் பொறாமை நிகழ்ச்சிகளும் போதுமான அளவு தன்னைச் சூழ்ந்து விட்டதையும் நினைத்துப் பார்த்துத் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்சத்தியமூர்த்தி, சாயங்காலம் ஏரிக்கரையில் பாரதியிடம் அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டாமென்றுதான் இப்போது அவன் நினைத்தான். பதில் அவளுடைய மனத்தை அதிகமாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/304&oldid=595445" இலிருந்து மீள்விக்கப்பட்டது