உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 பொன் விலங்கு

பாரதியார் பாடியிருக்கிறார்.மோகினியின் சிரிப்பிலோதிருமகளும், கலைமகளும் சேர்ந்து வாசம் செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. ‘மானிடவர்க்கென்று பேச்சுப் படின் வாழகிலேன்' என்று கண்களில் நீர் நெகிழக் கதறிக்கொண்டே ஆடும்போது அவளைப் பார்த்தால் மெய் சிலிர்க்கிறது. அவளுடைய அம்மாவும் கண்ணாயிரமும் அவளை எப்படி எப்படியோ ஆட்டிப் படைக்க முயலுகிறார்கள். ஆண் மக்கட் காவல் இல்லாத இந்தமாதிரிக் குடும்பம் ஒன்றும் இதற்கு ஆலோசகராகக் கண்ணாயிரத்தைப்போல் ஒரு வரம்பில்லாத போலி மனிதனும் வாய்த்துவிட்டால் மேலே சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை. எந்த வகையிலாவது தன்னைப் பெரிய மனிதனாக நிரூபித்துக்கொண்டு சமூகத்தில் உலாவ வேண்டுமென்று ஆசைப்படுகிறவன் கண்ணாயிரம். மோகினியும் முத்தழகம்மாளும் தன் சொற்படி கேட்கிறவர் என்று பிறர் புரிந்துகொள்வதனால் கண்ணாயிரத்துக்குச் சில செளகரியங்கள் இருந்து வருகின்றன. ஏழு எட்டு இடங்களுக்கு மோகினியோடும் முத்தழகம்மாளோடும் இப்படிப் போய்ப் பார்த்துப் பேசிச் சிரித்துவிட்டு வருவதனால் நாலைந்து இடங்களில் தன்னை ஞாபகம் வைத்துக் கொண்டாலும் கண்ணாயிரத்தின் விளம்பரத் தொழிலுக்கு அல்லது தொழில் விளம்பரத்துக்கு அது இலாபகரமான காரியம்தான். இந்த இலாபகரமான காரியத்துக்குத் தன்னையும், ஒரு கருவியாகக் கண்ணாயிரம் பயன்படுத்திக்கொள்ள முயலுவதும் அப்படிப் பயன்படுத்திக் கொள்வதற்கு அம்மா தெரிந்தும் தெரியாமலும் உடன்படுவதும் புரியப் புரியமோகினி மனம் குமுறுகிறாள். ஆனால் கண்ணாயிரம் யாருடைய மனக் குமுறலைப் பற்றியும் எதற்காகவும் கவலைப்படமாட்டான் என்பதை நான் அறிவேன். யார் யாரை எப்படி வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்று தெரிந்தவன் கண்ணாயிரம். வெண்டைக்காய்ப் பொரியலையும் எலுமிச்சம் பழ ஊறுகாயையும் பற்றியே இருபத்துநான்கு மணிநேரமும் பேசிக்கொண்டு திரிகிற சாப்பாட்டுப்பிரியரான பெரிய மனிதரிடம் கண்ணாயிரம் அதைப்பற்றியே பேசுவான். அப்படிப்பட்டவருக்கு எப்போதாவது எதற்காகவாவது கடிதம் எழுதினால்கூட அந்தக் கடிதத்தில் எங்காவது ஓரிடத்தில் கீழ்க்காணும் வாக்கியத்தைக் கண்ணாயிரம் நிச்சயமாக எழுதியிருப்பான். -

'இரண்டு நாளைக்குமுன் நம் வீட்டில் வெண்டைக்காய்ப் பொரியல் வைத்திருந்தார்கள். நன்றாக வாய்த்திருந்தது. ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/326&oldid=595491" இலிருந்து மீள்விக்கப்பட்டது